தனம் அண்ணனை முறை செய்யவிடாமல் தடுத்த மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

0
தனம் அண்ணனை முறை செய்யவிடாமல் தடுத்த மீனாவின் அப்பா -
தனம் அண்ணனை முறை செய்யவிடாமல் தடுத்த மீனாவின் அப்பா - "பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
தனம் அண்ணனை முறை செய்யவிடாமல் தடுத்த மீனாவின் அப்பா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் டிவி “பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ்” சீரியலில் கயலின் காது குத்து விழா நடைபெற இருக்கும் நிலையில், தனத்தின் அண்ணனை சீர் முறை செய்ய வேண்டாம் என மீனாவின் அப்பா சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தினர் அனைவரும் கண்ணன் ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொண்டு ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். மீனாவிற்கு ஐஸ்வர்யாவிற்கும் அடிக்கடி சிறிய சிறிய சண்டைகள் வந்தாலும் அது பெரிதாக்க காட்டப்படவில்லை. இந்நிலையில் கயல் பாப்பா பிறந்தநாள் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த வாரம் கயலுக்கு மொட்டை போட்டு காது குத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

பாரதி, கண்ணம்மாவை பிரிக்க புது திட்டத்துடன் களமிறங்கிய வெண்பா – சீரியலில் மாஸ் ரீஎன்ட்ரி!

இந்நிலையில் தனம் ஜெகாவை தாய் மாமா முறை செய்யவேண்டும் என சொல்லி இருந்தார். ஜெகாவும் சரி என சொல்ல, தற்போது அடுத்த எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் காது குத்து விழாவிற்கு அனைவரும் கூடி இருக்க ஜெகா தாய் மாமன் முறை செய்ய வருகிறார். ஆனால் மீனாவின் அப்பா நீங்க ஏன் தேவை இல்லாமல் செலவு செய்யணும் என கேட்கிறார். பரவாயில்லை என ஜெகா சொல்ல, மீனா அப்பாவின் அண்ணன் பையன் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பதாக மீனாவின் அம்மா சொல்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்? ரசிகர்கள் ஷாக்!

அவர் தான் முறை செய்ய போகிறார் என சொல்ல, ஜெகாவிற்கு அவமானமாக இருக்கிறது . தனமும் மூர்த்தியும் ஜெகா புறக்கணிக்கப்படுவதை நினைத்து வருத்தப்படுகிறார். மீனாவின் அண்ணன் வெடி வெடித்துக் கொண்டு வர அவருக்கு மீனாவின் அப்பா மாலை போட்டு வரவேற்கிறார். மேலும் இதை எல்லாம் பார்த்து கஸ்தூரியும் கோவமாக இருக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!