‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ரீல் சரவணன் – சரவண விக்ரமின் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் ரீல் சரவணன் - சரவண விக்ரமின் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் ரீல் சரவணன் - சரவண விக்ரமின் பதிவு! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ரீல் சரவணன் – சரவண விக்ரமின் பதிவு! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியின் கடைசி தம்பி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல் சரவணன் என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதை சென்று கொண்டிருந்தது. ஆனால் கதையில் பெரிய திருப்பமாக கடைசி தம்பி கண்ணனின் காதல் திருமணம் இருந்தது. இதனால் அண்ணன் தம்பிகளில் ஒருவர் பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பு திறமையால் அவர் கண்ணன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து வருகிறார் என சொல்லலாம்.

புது பொண்ணு ரேஷ்மாவுடன் ‘கண்ணம்மா’ வினுஷாவின் போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!

கண்ணன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக முதலில் விஜே தீபிகா நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவரும் விஜே தீபிகாவும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரும் இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதில் வெளி இடங்களுக்கு செல்லும் வீடியோ, சமையல் வீடியோ என பதிவிட்டு வருகின்றனர். இருவரையும் ஒன்றாக பார்க்கவே பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஜெனி அக்காவுடன் சேர்ந்த இனியா – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரவண விக்ரம் பல புகைப்படங்களையும், படபிடிப்பு தள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் ரீல் சரவணன் மற்றும் ரியல் சரவணன் என புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது மூர்த்தி கடையில் வேலை பார்க்கிற பையன் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் சரவணன் என்பதால் அவர் அவ்வாறு பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!