‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனாவின் புத்தாண்டு வாழ்த்து – வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனாவின் புத்தாண்டு வாழ்த்து - வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனாவின் புத்தாண்டு வாழ்த்து - வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனாவின் புத்தாண்டு வாழ்த்து – வைரல் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரை உலகில் தற்போது அதிக பிரபலமாக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் நடிகை ஹேமா தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புத்தாண்டு வாழ்த்து:

சின்னத்திரையில் மக்களை தங்கள் வசம் இழுக்க ஏதாவது புதுப்புது திருப்பங்களை சீரியலில் செய்து வருகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அன்றாடம் அனைத்து குடும்பங்களிலும் நடப்பதை போன்று காட்சிகளை அமைத்து வருகின்றனர். இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் சீரியலை அதிகம் ரசித்து வருகின்றனர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் 4 ஜோடிகள் இருப்பதால் அனைவர்க்கும் வீட்டில் இடம் பத்தவில்லை என்ற புதிய பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டலாம் என்று தனம் மூர்த்தியிடம் கோரி வருகிறார்.

‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் வாழ்க்கையை புரட்டி போட்ட 2021 – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் புது கடை கட்டி வருவதால் இப்போதைக்கு வீடு கட்ட முடியாது என்று கூறி விடுகிறார். அதன் பிறகு, கயல் பாப்பா பிறந்த நாள் விழா சமீபத்தில் தான் முடிந்துள்ள நிலையில், தற்போது காது குத்தி மொட்டை போடும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கும் போது, மீனாவின் அப்பா வழக்கம் போல் வந்து என் பேத்திக்கு நான் தான் செய்வேன் என்று ஆடம் பிடிக்கிறார். வேறு வழியில்லாமல் மூர்த்தியும் ஒத்துக்கொள்கிறார். இதனால் இனி வரும் எபிசோடுகள் கலாட்டாவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதை வரும் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா நடிப்பில் அதிக முன்னேற்றத்தை காட்டி வருகிறார்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் அவருக்கு அதிக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சேர்ந்து வருகின்றனர். அடிக்கடி அதில் வீடியோ மற்றும் பல பதிவுகளையும் ஹேமா பதிவிட்டு வருகிறார். தற்போது 2022ம் வருடம் பிறந்துள்ளதால் பல பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஹேமாவும் தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் தொடர்ந்து மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். ஹேமாவின் வாழ்த்துக்கு பலரும் பதில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!