‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் வாழ்க்கையை புரட்டி போட்ட 2021 – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
'குக் வித் கோமாளி' சிவாங்கியின் வாழ்க்கையை புரட்டி போட்ட 2021 - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
'குக் வித் கோமாளி' சிவாங்கியின் வாழ்க்கையை புரட்டி போட்ட 2021 - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் வாழ்க்கையை புரட்டி போட்ட 2021 – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமடைந்த நடிகை மற்றும் பாடகியான சிவாங்கி இந்த வருடம் குறித்து தனது அனுபவங்களை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சிவாங்கி

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி சீசன் 1ஐ விட சீசன் 2 மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. அதற்கு முக்கிய காரணமாக பாடகி ஷிவாங்கி பார்க்கப்படுகிறார். அவரும் அவரது அண்ணனாக கருதப்படும் புகழ் மற்றும் அஸ்வின் உடன் செய்த லூட்டிகள் ஏராளம் என்று தான் கூற வேண்டும். அவர் செய்யும் அனைத்து செயல்களும் மிகவும் கியூட்டாக இருந்ததால் அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருந்தது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ரசிகர்கள் உற்சாகம்!

இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 2021 முடிந்து தற்போது 2022ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் சிவாங்கி தான் கடந்து வந்த பாதையை தனது ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். அதன்படி இந்த வருடத்தில் தான் தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவு பெற்றது என்றும் தான் இந்த வருடத்தில் மட்டும் நிறைய பாடல்களை பாடி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜனவரி 4 முதல் விநியோகம்!

2021 ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதனை வைத்து அவர் அப்படி தெரிவித்தார் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. தான் இந்த 2021ம் வருடத்தில் நிறைய விருதுகளை வாங்கி உள்ளதாகவும் தனக்கு மிகவும் எமோஷனலான ஒரு வருடமாக 2021 இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். சிவாங்கியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!