‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் பொங்கல் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா ஹேமாவின் பொங்கல் கொண்டாட்டம் - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமாவின் பொங்கல் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா தற்சமயம் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி வருவதை போல வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் மனம் கவர்ந்த விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பல நாட்களாக கொண்டாட்டம் தொடர்பான போக்கில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அதாவது ஒரு வீட்டில் துக்ககரமான சம்பவம் நடைபெற்றால் அதற்கு பின்பு நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மாவின் இறப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் வெளியானதற்கு பின்பாக பல நல்ல விஷயங்கள் நடைபெற்றுள்ளது.

ஜனவரி 18 முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அதாவது தனத்திற்கு குழந்தை பிறந்தது, லட்சுமண பாண்டியனுக்கு பெயர் வைத்தது, கயலின் காது குத்து என பல்வேறு கொண்டாட்டங்கள் அரங்கேறியது. இதனை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களத்தில் தற்சமயம் பொங்கல் கொண்டாட்டம் நடந்திருக்கிறது. இம்முறை மீனாவின் அப்பா ஜனார்த்தனன் வீட்டில் வைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பொங்கலை கொண்டாடுவது போல கடைசி எபிசோடு வெளியாகி இருந்தது.

TNPSC துறைத்தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் மீனா, அதாவது நடிகை ஹேமா பொங்கல் பண்டிகையை தனது சொந்த குடும்பத்தாருடன் கொண்டாடுவதற்காக பர்சேஸிங்கில் ஈடுபட்டிருக்கிறார். அந்த வகையில், பொங்கல் வைக்க தேவையான மளிகை பொருட்கள், கரும்பு, கோலப்பொடி, பூஜைக்கு தேவையான காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி வந்துள்ள ஹேமா அதனை வீடியோவாக எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். மேலும், தனது மகன் ஷாத்விக்கின் பொங்கல் பண்டிகை குறித்தும் சில ஸ்வாரசியமான விஷயங்களை பகிர அந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here