‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் – ஜீவா இன்ஸ்டா பதிவு!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் - ஜீவா இன்ஸ்டா பதிவு!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் - ஜீவா இன்ஸ்டா பதிவு!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவிற்கு குவியும் பாராட்டுகள் – ஜீவா இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரம் இறந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கு காட்சிகள் 2 வாரங்கள் படமாக்கப்பட்டதாகவும், அதில் அவர் சிறிது கூட சலிப்பு காட்டவில்லை என அவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜீவா.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டது சில வாரங்கள் காட்டப்பட்டது. அதன் பின்னர் லட்சுமி அம்மா இறந்து விட்டதால் இறுதி சடங்குகள் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நிஜத்தை போல ஒவ்வொரு நிகழ்வுகளும் தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகை ஷீலா நடிக்க ஒப்புக்கொண்டது தான் பாராட்டத்தக்கது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகை? ஆனந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்நிலையில் அந்த சீரியலில், ஜீவா கதாபாத்திரத்தில் நடிப்பவர், ஷீலா அம்மாவின் நடிப்பை பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இறுதி சடங்கு காட்சிகள் இரண்டு வாரங்கள் எடுக்கப்பட்டது. அதில் ஷீலா அம்மா நடிக்கும் போது ஒரு சீனில் கூட முகத்தை காட்டாமல் நடித்தார் என பாராட்டி பதிவிட்டுள்ளார். மேலும் அவர் இறந்ததாக காட்டப்பட்டு விட்டது முதல் அவரை அடக்கம் செய்யும் வரை முழு காட்சிகளையும் படமாக்கியுள்ளனர்.

ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!

நீர் மாலை எடுப்பது, அவரை குளிப்பாட்டுவது, பாடையில் படுக்க வைப்பது, வாயில் அரிசி போடுவது என எல்லா சீன்களில் நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம் தான். மேலும் அவர் அந்த சீனில் நடிக்க சொன்னதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனவும், தனது குடும்பத்தினர் திட்டினார்கள் எனவும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!