பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ‘பாக்கியலட்சுமி’ நடிகை? ஆனந்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ் தற்போது பிக் பாஸ் போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் அனைவருக்குமே தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஒரு தனி ஆர்மியே இருக்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் தற்போது முக்கிய கட்டமாக ஜெனி கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வருகிறது. இதனால் சீரியல் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
ரோஜா, அம்மா பாசத்தை பார்த்து கடுப்பாகும் அனு – இன்றைய “ரோஜா” சீரியல் ப்ரோமோ!
இப்படியாக இருக்க, நடிகை திவ்யா கணேஷ் நடிகை ஷகிலாவின் மகளான மிலாவின் பிறந்தநாள் விழாவிற்கு அவரை வாழ்த்தும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் செய்திருந்தார். அதில் இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது மிலா திவ்யா பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க இருக்கிறார் என்று கூறியதும் அதற்கு திவ்யா, ‘ஆமா நான் தான் போக போறேன்’ என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலுக்காக கண்ணன் செய்த காரியம் – புது கெட்அப்! தங்கை வாழ்த்து!
இவர் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார் என்றால் இனி ‘பாக்கியலட்சுமி’ ஜெனி கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்கங்களாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி இந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை மிலா, தொகுப்பாளினி பிரியங்கா ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.