கண்ணனுக்கு மளிகை பொருட்களை அனுப்பி வைக்கும் தனம் – விஷயத்தை தெரிந்து கொண்ட மூர்த்தி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன், ஐஸ்வர்யாவின் வீடு தேடி வரும் மளிகை பொருட்களை கண்ட கண்ணன் அதில் இருக்கும் அண்ணனின் கையெழுத்தை பார்த்து கண் கலங்குவதாக ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி, பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியுள்ளது.
புதிய ப்ரோமோ
அண்ணன் மற்றும் தம்பிகளுக்கு இடையே நடைபெறும் பாசப்போராட்டங்களுடன் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கதைக்களம் சூடுபிடித்துள்ளது. இதுவரை ஏற்பட்ட எந்தவொரு பிரச்சனையின் போதும் ஒன்றாக இருந்து வந்த குடும்பம், கண்ணனின் திடீர் திருமணத்தால் நிலை குலைந்தது. இதை தொடர்ந்து வீட்டை விட்டு துரத்தப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, தங்குவதற்கு ஒரு சரியான இடமில்லாமல் தெருவில் அலைந்து திரிகின்றனர்.
ஆதார் தொடர்பான 2 சேவைகள் நிறுத்தம் – UIDAI அதிரடி!
இதனை காணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவிகளை அண்ணன் மூர்த்திக்கு தெரியாமல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மூர்த்தி பெயரை சொல்லிக்கொண்டு பெரியவர் ஒருவர் கண்ணன், ஐஸ்வர்யா தங்குவதற்கு ஒரு வீடு கொடுத்துள்ளார். பின்னர் ஜீவா, கண்ணனின் செலவுக்கு 4 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இந்த எபிசோடுகள் தான் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கிறது. இதையடுத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் ஜீவா கொடுத்த பணத்தை வைத்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் வழியில் மூர்த்தி மற்றும் தனத்தை பார்க்கின்றார். மூர்த்தி வரும் வண்டியில் மோதும் கண்ணனை கண்டு, அவர் முகத்தை திருப்பி விட்டு செல்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் கண்ணன், ஐஸ்வர்யா சமைப்பதற்கு ஒன்றும் வாங்கவில்லை என்பதை அறிய, அதே நேரத்தில் கடை குடோனுக்கு வரும் தனம், கண்ணனுக்கு தேவையான மளிகை பொருட்களை அனுப்பி வைக்கும்படி கதிர், ஜீவாவிடம் கூறுகின்றார்.
TN Job “FB
Group” Join Now
இதை மறைந்திருந்து மூர்த்தி கேட்டு விடுகிறார். பின்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருந்து கண்ணனின் வீடு தேடி மளிகை பொருட்கள் அடங்கிய பெட்டி வருகிறது. அதனை எடுத்த கண்ணன், ஐஸ்வர்யா சமையலுக்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் இருப்பதை கண்டு ஆச்சரியப்படுகின்றனர். தொடர்ந்து அதில் இருக்கும் லிஸ்ட்டில் தனது அண்ணனின் கையெழுத்தை பார்த்த கண்ணன் தேம்பி தேம்பி அழுகிறார். இந்தவாறு பாண்டியன் ஸ்டோர்ஸின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.