‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி – ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி - ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி - ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையாக நடிக்க பயந்த காவ்யா அறிவுமணி – ஓபன் டாக்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி தான் முல்லையாக சீரியலில் அறிமுகமாகி 1 வருடம் முடிந்துள்ள நிலையில், தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.

நடிகை காவியா அறிவுமணி

விஜய் டிவியில் முக்கியமான ஒரு சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. கூட்டு குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை ரசிகர்களுக்கு பிடித்த வகையில் ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும், இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை விஜே சித்ரா தான் ஆரம்பத்தில் நடித்து வந்தார். அதன் பிறகு, அவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொண்டார்.

Vijay TV Big Boss Promo | அபிநய் மேல் ஈர்ப்பு இருப்பதாக ஒத்துக்கொள்ளும் பாவ்னி, வறுத்தெடுத்த கமல் ஹாசன்!!

அவரது மரணத்தினை யாருமே இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். அவரது கதாபாத்திரத்தில் அப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதிக்கு தங்கையாக அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை காவியா நடித்து வந்தார். அவரே முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் இவரை முல்லை கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் முன் வரவில்லை. பின்னர், இவரது எதார்த்த நடிப்பின் காரணமாக இவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல் – ரசிகர்கள் ஷாக்!

இவர் இந்த கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து ஒரு வருடம் முடிந்துள்ள நிலையில், அந்த அனுபவம் குறித்து நடிகை காவியா தனது ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இவருக்கு மிகவும் பதட்டமாக இருந்ததாம். பின்னர், தான் இவர் கொஞ்சம் சரி ஆகி, தன்னம்பிக்கையுடன் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஒரு வருடத்தில் தனக்கு ஆதரவு அளித்திருந்த அனைவர்க்கும் நன்றியும் அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here