விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. அதனால் ‘பிக்பாஸ் சீசன் 5’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
பிக்பாஸ்:
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை 4 சீசன்கள் நடைபெற்று முடிந்து தற்போது சீசன் 5 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெவ்வேறு போட்டியாளர்கள், தினந்தோறும் புதிய டாஸ்க்குகள் என்று எப்போதும் சுவாரசியமாகவே இருக்கும். மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உலக நாயகன் கமல்ஹாசனுகாகவும் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் அதிகம். பாடகி இசைவாணி, சின்னத்திரை நடிகர் ராஜு, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, சிபி, மாடல் மதுமிதா, ராப் சிங்கர் ஐக்கி, ஸ்ருதி, நாட்டுப்புற கலைஞர் தாமரை செல்வி என மொத்தம் 15 பேர் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தை கிண்டல் செய்த கண்ணன் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!
அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். தற்போது என்ட்ரியாக அமீர் மற்றும் சஞ்சீவ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புகளும் , எதிர்மறை கருத்துக்களும் வந்தது. ஆனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக தொடர ஆரம்பிக்கும் பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் கடந்த வாரம் சன் டிவி பூவே உனக்காக சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி உள்ளது.
ஏற்கனவே சீசன் 5 பிக்பாஸ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக ஜீ தமிழில் சர்வைவர் சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆர்வம் குறைந்துள்ளது. இவைகளை தொடர்ந்து பூவே உனக்காக சீரியல் பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ரியாலிட்டி ஷோவையே பின்னுக்கு தள்ளி பூவே உனக்காக தொடர் அதிக புள்ளிகளை பெற்று டிஆர்பி வரிசையில் முன்னணியில் உள்ளது.