கண்ணனுடன் மீண்டும் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

0
கண்ணனுடன் மீண்டும் இணைந்த
கண்ணனுடன் மீண்டும் இணைந்த "பாண்டியன் ஸ்டோர்ஸ்" ஐஸ்வர்யா - வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணனுடன் மீண்டும் இணைந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா – வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவணவிக்ரம் பழைய ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா உடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கண்ணன், ஐஸ்வர்யா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் பாசமாக பழகி வர கடைசி தம்பி கண்ணன் காதலால் அண்ணன் தம்பிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கண்ணனை வீட்டை விட்டு அனுப்பினாலும் அண்ணன் அண்ணி என அனைவரும் அவர் மீது அக்கறையுடன் உதவியாக இருந்து வருகின்றனர். கதிரால் கண்ணன் அடிவாங்க அவருக்கு ஆதரவாக மூர்த்தி பேச வீட்டிற்குள் வைத்து தனம் பார்த்து கொள்கிறார். அதனால் கண்ணனை மீண்டும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்குள் வந்துள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலுடன் இணைந்த ஹேமா!

கண்ணன் கதாபாத்திரத்தில் சரவணவிக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக முதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். இருவரும் அருமையான ஜோடியாக மக்களிடம் பிரபலமடைந்தனர். ஆனால் தீபிகா சில காரணங்களால் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். சீரியலில் இருந்து நீக்கினாலும் சரவணவிக்ரம் விஜே தீபிகா நட்பாக பழகி வருகின்றனர். பல இடங்களில் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என பலமுறை கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் நண்பர்கள் தான் என பல இடங்களில் சொல்லி இருக்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் விஜே தீபிகா தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சரவண விக்ரம் உடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிடுவார். அந்த வகையில் தற்போது கோயம்பத்தூரில் உள்ள கடை ஒன்றில் சாப்பிட சென்று அங்கே வீடியோ எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள், இந்த ஜோடியை மீண்டும் சீரியலில் பார்க்க வேண்டும் என தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!