‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலுடன் இணைந்த ஹேமா!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - அகிலுடன் இணைந்த ஹேமா!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் - அகிலுடன் இணைந்த ஹேமா!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – அகிலுடன் இணைந்த ஹேமா!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசா, அகில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுகேஷ் உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் புதிது புதிதாக மாறுபட்ட கதையுடன் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு மவுசு குறையவில்லை. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் மற்றும் வினுஷா நடித்து வருகின்றனர். மேலும் ரூபாஸ்ரீ, ரிஷி, சுகேஷ், கண்மணி என பலர் இந்த சீரியலில் நடிக்கின்றனர். பாரதி, கண்ணம்மாவின் குழந்தைகளாக லட்சுமி, ஹேமா கதாபாத்திரத்தில் லிசா மற்றும் ரக்க்ஷா நடித்து வருகிறார்கள். 10 ஆண்டுகளாக பாரதி, கண்ணம்மா பிரிந்து இருந்த நிலையில் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய வெண்பா இவர் தானா? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

அதனால் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பாரதி, கண்ணம்மாவை வெறுக்க வைக்க வேண்டும் என நடந்து கொள்வது அனைத்தும் நகைச்சுவையாக இருக்கிறது. அதனால் TRPயில் பெரிய சாதனையை செய்து வருகிறது. தமிழ் சீரியல்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்ற பெருமை பாரதி கண்ணம்மாவிற்கு உண்டு. இந்நிலையில் பாரதி, கண்ணம்மாவை விரைவில் புரிந்து கொள்ள வேண்டும். லக்ஷ்மிக்கு அப்பா கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் நடிக்க துவங்கிய பரினா? வீடீயோவை பார்த்து உற்சாகத்தில் ரசிகர்கள்!

இப்படி பரபரப்பாக கதைக்களம் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்கும் லிசா மற்றும் அகில் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுகேஷ் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்றை செய்துள்ளனர். அதில் இருவரும் இணைந்து ஆய்லா ஆய்லா பாடலுக்கு அருமையாக நடனம் ஆடி இருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் இருவரும் அருமையாக நடனம் ஆடுவதாக கமெண்ட் செய்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here