“பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் வீடியோ!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" நடிகர் வீட்டில் நடந்த விசேஷம் - வைரலாகும் வீடியோ!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகர் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் வீட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது, அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தை பற்றியும் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பற்றி மட்டுமே கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் பெரிய பிரச்சனை வந்து இரண்டாவது தம்பி குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார். அதனால் கதைக்களம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்து இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரமின் தங்கை சூர்யாவின் திருமண நிகழ்ச்சி சென்ற வாரம் நடைபெற்றது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர். கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரன், தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதா, முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றாக இணைந்து வீடியோ எடுத்துள்ளனர்.

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் மொத்த சொத்து மதிப்பு – ரசிகர்கள் ஷாக்!

மேலும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் இதற்கு முன்னதாக நடித்த விஜே தீபிகாவும் அவர்களுடன் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கம்பம் மீனா ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். இது குறித்த வீடியோ ஒன்றை நடிகை சுஜிதா தன்னுடைய யூடுயூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!