விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் மொத்த சொத்து மதிப்பு – ரசிகர்கள் ஷாக்!
சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் ப்ரியங்கா. அவருடைய ஆங்கரிங் ஸ்டைலிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில் அவருடைய மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
தொகுப்பாளினி பிரியங்கா:
விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் பிரியங்கா. அவருடைய நகைச்சுவையான ஆங்கரிங் திறமைக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவர் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி இரண்டாம் இடத்தை பிடித்தார். அந்த வகையில் இயல்பாகவே நகைச்சுவை குணத்தை கொண்டவர். விஜய் டிவியில் டிடிக்கு அடுத்தபடியாக ப்ரியங்கா தான் டாப் வரிசையில் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அவரும் மாகாபா ஆனந்த் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் பிரியங்கா தனியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அந்த நிகழ்ச்சிகள் ஹிட்டாக பிரியங்காவும் ஒரு காரணம் என சொல்லலாம். எவ்வளவு தான் கலாய்த்தாலும் பிரியங்கா அதை ஜாலியாக எடுத்துக் கொள்வார் அதுவே அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
சன் டிவி ‘கயல்’ சீரியலில் வில்லியாக களமிறங்கும் நடிகை உமா ரியாஸ்கான் – ரசிகர்கள் உற்சாகம்!
சமீபத்தில் அவருடைய திருமணம் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் வருகிறது. ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத அவர் தொடர்ந்து தன்னுடைய தொழிலில் ஆர்வம் செலுத்தி வருகிறார். தொடர்ந்து வெற்றியை பார்த்து வரும் ப்ரியங்காவின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி அவர் சொத்து மதிப்பு $1.16 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.