Home Blog Page 9817

TNMRB 2018 –  25 Radiotherapy Technician பணியிடங்கள் :

TNMRB 2018 –  25  கதிரியக்க  சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் பணியிடங்கள் :

தமிழ்நாடு மருத்துவ சேவை ஆட்சேர்ப்பு வாரியம் (TNMRB)  கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் பதவியில் 25 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 26.03.2018 க்கு முன்பு இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 25

பணியிடத்தின் பெயர்:-  Radiotherapy Technician

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் For all categories (SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC/) / மாற்றுத்திறனாளிகள் / Ex-Service men விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு  18 to 57 வயது வயத்திற்கும், மற்றும் OC விண்ணப்பதாரர்களில் For all categories (SC/ ST/ SCA/ BC/ BCM/ MBC & DNC/) க்கு 18 to 40 வயது வயத்திற்கும் / மாற்றுத்திறனாளிகள் 18 – 50 வயது வயத்திற்கும் / Ex-Service men 18 to 48 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம், தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள வேறு எந்த நிறுவனத்திலிருந்தும், ரேடியோதெரபி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் 

தேர்வு கட்டணம்: 

பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 500/-

SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பதாரர்கள் – Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் www.mrb.tn.gov.in – 26.03.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

அறிவிப்பு தேதி 06.03.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 26.03.2018
இந்திய வங்கியின் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 28.03.2018

முக்கிய இணைப்புகள் :

[table id=46 /]

மார்ச் 8 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

ரூ.390 கோடியில் 82 புதிய திட்டங்கள்; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அறிவிப்பு

  • தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

சர்வதேச மகளிர் தினம் – 08.03.2018

  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி ரயில் நிலையம் பெண்களே நிர்வகிக்கும் ரயில் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதனை தென் மத்திய ரயில்வே துறை பொது மேலாளர் வினோத்குமார் யாதவ் தொடங்கி வைத்தார்.

60 நாடுகள் பங்கேற்கின்றன மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந்தேதி முதல் ராணுவ கண்காட்சி

  • மாமல்லபுரத்தில் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கும் ராணுவ கண்காட்சியில் 60 நாடுகள் தங்கள் அரங்குகளை அமைத்து ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்துகின்றன.
  • வங்க கடலுக்கு பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்களும் வருகை தருகின்றன.
  • இந்த ஆண்டு மந்திரி நிர்மலா சீதாராமன் முயற்சியால் முதன் முறையாக தமிழகத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

இந்தியா

வரலாறு படைத்த இந்தியர்

  • இந்தியாவின் சிறந்த கட்டிடக்கலைஞர் பாலகிருஷ்ணா தோஷிக்கு நோபல் பரிசுக்கு இணையான கட்டிடக்கலையில் வழங்கப்படும் ‘பிரிட்ஸ்கர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுக்கு இணையாக பிரிட்ஸ்கர் விருது கருதப்படுகிறது. கட்டிடக்கலையில் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் பாலகிருஷ்ணா(வயது90) என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன் இந்த விருதை உலகின் சிறந்த கலைஞர்களான ஜாகா ஹாதித், பிராங்க் ஜெஹ்ரி, ஐஎம் பீ, ஷெங்கரு பான் ஆகியோர் பெற்றுள்ளனர்.

கவுரவக் கொலைகளை குற்றமாக கருத புதிய சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

  • திருமண உறவுக்கான சுதந்திரத்தில் பிறரின் தலையீட்டை தடுக்க வகை செய்யும் புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது.
  • கவுரவக் கொலைகளை திட்டமிட்ட குற்றச் செயலாக கருதும் இச்சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.

நாகலாந்து முதல்வராக நிபீயோ ரியோ பதவியேற்றார்

  • நாகலாந்து மாநிலத்தின் முதல்வராக தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் நிபீயோ ரியோ அம்மாநில ஆளுநர் பி பி ஆச்சார்யா முன்னிலையில் பதவியேற்றார்.
  • பாஜக கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ள நிபீயோ ரியோ நான்காவது முறையாக அம்மாநில முதல்வராக பதவியேற்றுள்ளார்.

டெல்லி விமான நிலையம் தரமான சேவை வரிசை பட்டியலில் உலகில் முதலிடம்

  • சர்வதேச விமான நிலைய கவுன்சில், சர்வதேச அளவில் பரப்பளவு மற்றும் பயணிகள் வந்து செல்லும் விகிதத்தின் அடிப்படையில், விமான நிலையங்களின் சேவைத் தரத்தினை ஆண்டுதோறும் ஆராய்ந்து வருகிறது.
  • அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப்பட்டியலை அந்த கவுன்சில் வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில்  டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உலகம்

ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை ரத்து செய்தது அமெரிக்க அருங்காட்சியகம்

  • மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட விருதை அமெரிக்க அருங்காட்சியகம் ரத்து செய்தது.
  • அமெரிக்காவின் ஹோலோகாஸ்ட் மெம்மோரியல் அருங்காட்சியகம் கடந்த 2012-ம் ஆண்டு சூச்சிக்கு எல்லி வெய்ஸல் (Elie Wiesel) என்ற உயரிய விருதினை வழங்கியது.
  • இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட அந்த விருதினை ரத்து செய்வதாக அருங்காட்சியகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உலக சிறுநீரக தினம்

  • சிறுநீரக நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்ச் – 8, உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வணிகம்

பிரைவேட் ஈக்விட்டி முதலீடு பிப்ரவரியில் 60 சதவீதம் சரிவு

  • பிப்ரவரி மாத பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேபிடல் முதலீடு 60 சதவீதம் வரை சரிந்திருக்கிறது.
  • மார்ச் மாதத்தில் மொத்தம் 63 முதலீடுகள் மூலம் 140 கோடி டாலர் முதலீடுகள் வந்துள்ளன.
  • மிகப்பெரிய முதலீடுகள் இல்லாததே காரணம் என இஒய் நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

விளையாட்டு

அஸ்லான் ஷா ஆக்கி: இந்திய அணி முதல் வெற்றி

  • 6 அணிகள் பங்கேற்றுள்ள 27-வது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வருகிறது.
  • தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது.
  • லக்ரா(10-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (42 மற்றும் 57-வது நிமிடம்), சுமித் குமார் (48-வது நிமிடம்), ரமன்தீப்சிங் (51-வது நிமிடம்) ஆகியோர் இந்திய அணியில் கோல் போட்டனர்.

PDF Download

NEET தேர்வு 2018 – கடைசி தேதி நீட்டிப்பு

NEET தேர்வு 2018 – கடைசி தேதி நீட்டிப்பு :

மத்திய கல்வி வாரியம் (CBSE)  MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) 06.05.2018 நடத்த உள்ளது.  தற்பொழுது இத்தேர்வின் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி 09.03.2018 லிருந்து 12.03.2018 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு  

 NEET தேர்வு 2018 – அறிவிப்பு

மார்ச் 7 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

19 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

  • தமிழகம் முழுவதும் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் முதல்முறையாக பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடக்கம்

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,070 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் பேர் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் முதல் அணியாக பிளஸ் 1 பொதுத்தேர்வை எழுதுகிறார்கள்.
  • இதற்காக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் 2,795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதக் கலவரம் பரவுவதை தடுக்க இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

  • இலங்கையில் மதக் கலவரம் பரவுவதை தடுக்க அந்நாடு முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு என ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன் பெறுவார்கள்.

மகளிர் தினம் முன்னிட்டு ரூ.8-க்கு சிறுநீரகப் பரிசோதனை: டெல்லியில் (08.03.2018)

  • உலக மகளிர் தினமும் உலக சிறுநீரக தினமும் ஒன்றாக இணைந்து வருவதை முன்னிட்டு டெல்லியில் இயங்கிவரும் லைப்லைன் ஆய்வகம் அனைவருக்கும் பயன்படும்வகையில் ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • மார்ச் 8 மகளிர்தினம் முன்னிட்டு ரூ.8க்கு சிறுநீரகப் பரிசோதனை செய்யப்படும். 08.03.201 காலை 10 முற்பகல் தொடங்கி மாலை 6 மணிவரை இவ்வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

‘நீட் தேர்வுக்கு ஆதார் எண் கேட்கக்கூடாது’’ – உச்ச நீதிமன்றம் உத்தரவு

  • நீட் தேர்வு எழுதுபவர்களிடம் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி கேட்கக்கூடாது என சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லெனின் சிலை உடைப்பு எதிரொலி

  • திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையையும், வேலூரில் பெரியார் சிலையையும் பாஜகவினர் உடைத்தற்கு பதிலடியாக, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலை மாணவர்கள் பாஜக நிறுவனர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் சிலையை உடைத்து முகத்தில் கறுப்பு மை பூசினர்.

உலகம்

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல்: 

  • போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெஸோஸ் முதலிடம் பிடித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹபீஸ் சயீதைக் கைது செய்ய லாகூர் உயர் நீதிமன்றம் தடை

  • ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீதை கைது செய்யக் கூடாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் அதிகாரிகளுக்குத் தடை விதித்துள்ளது.
  • 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதி இவர் என்று அமெரிக்கா, ஐநா, இந்தியா ஆகிய நாடுகள் அறிவித்ததையடுத்து அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டனின் சாலிஸ்பரி நகர ஓட்டலில் ரஷ்ய உளவாளி மீது ரசாயன தாக்குதல்

  • ரஷ்ய ராணுவத்தில் மூத்த தளபதியாக பணியாற்றியவர் செர்ஜி ஸ்கேரிபால்.
  • பிரிட்டனின் சாலிஸ்பரி நகர ஓட்டலில் செர்ஜி ஸ்கேரிபால் மீது மர்ம ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது.
  • இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்ய உளவாளிகள் இருப்பதாக பிரிட்டிஷ் உளவு அமைப்புகள் சந்தேதகம் தெரிவித்துள்ளன. இதனை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் மறுத் துள்ளது.

வணிகம்

உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகள் அளிப்பு: இன்ஃபோசிஸ் தகவல்

  • இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் முக்கியமான உயரதிகாரிகளுக்கு 19.3 லட்சம் பங்குகளை வழங்கி உள்ளது. புதிதாக பதவி ஏற்றிருக்கும் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கிற்கு 1.13 லட்சம் பங்குகள் வழங்கப்பட்டிருக்கிறது.
  • இதில் 84,768 பங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதமுள்ள 28,226 பங்குகளை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த தகவலை பிஎஸ்இ-க்கு இன்ஃபோசிஸ் தெரிவித்திருக்கி றது.

பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் இலக்கு

  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
  • இதற்கேற்ப அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் பெண் பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை அதிகரிக்க உள்ளது.

விளையாட்டு

தாயகம் திரும்பிய கவுதம் கம்பீருக்கு புதிய பொறுப்பு

  • 2018 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து தாயகம் திரும்பிய கவுதம் கம்பீர் டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணி உரிமையாளர் கவுதம் கம்பீரை ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

PDF Download

SSCNR – CGL (Tier-II) Exam-2017 Re-Exam தேர்வு நுழைவுச்சீட்டு

SSCNR – CGL (Tier-II) Exam-2017 Re-Exam தேர்வு நுழைவுச்சீட்டு:

 SSCNR CGL (Tier-II) Exam-2017 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நாள் 09.03.2018.

SSCNR – CGL (Tier-II) Exam-2017 Re-Exam Call Letter

 

BHEL திருச்சி ஆட்சேர்ப்பு 2018 –  918 Trade Apprentice  பணியிடங்கள்:

BHEL திருச்சி ஆட்சேர்ப்பு 2018 –  918 Trade Apprentice  பணியிடங்கள்:

BHEL(Bharat Heavy Electricals Limited) திருச்சி, Trade Apprentice பதவியில் 918 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20-03-2018 க்கு முன்பு இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20-03-2018 லிருந்து 22.03.2018  ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

மொத்த பணியிடங்கள்: 918

பணியிடத்தின் பெயர்: Trade Apprentice.

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-04-2018  அன்று 18 வயதிற்கும் 27 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.  OBC வகுப்பினர் 3 ஆண்டுகளுக்கும், SC/ST வகுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  NCTVT சான்றிதழ் ,08 வது வகுப்பு & ITI / 10 வது / 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( https://www.bheltry.co.in/)   05-03-2018  முதல்  22-03-2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்: 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள் 05-03-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 22-03-2018
பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் 23-03-2018
எதிர்பார்த்த சான்றிதழ் சரிபார்ப்பு காலம் 26-03-2018

முக்கிய இணைப்புகள் :

[table id=45 /]

மார்ச் 6 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

தமிழகம் முழுவதும் உள்ள 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரலில் தேர்தல்

தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின்கீழ் உள்ள 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை செயலாளராக கே. சீனிவாசன் நியமனம்

  • தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சட்டப்பேரவைச் செயலக நிருபர் பிரிவில் இருந்து பதவி உயர்வு மூலம் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த கே.சீனிவாசன், கடந்த ஆண்டு இறுதியில் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தெருவிளக்கு, சாலை, குடிநீர், குப்பை, நாய் தொல்லைக்கு புகார் அளிக்க நம்ம சென்னை மொபைல் ஆப்: தற்போது ஐபோனிலும்…

  • பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை என்ற புதிய செயலி (Namma Chennai app)தற்போது ios(iphone) என்ற மென்பொருள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து, புகார்களை பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா

உலகின் வலிமையான ராணுவம்: இந்தியாவுக்கு 4-வது இடம்

  • 2017-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலை குளோபல் ஃபயர் பவர் (ஜிபிஎப்) அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இப்பட்டியலில் 133 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளன.
  • அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தை பெற்றுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கும் சீருடை

  • கல்லூரி மாணவர்களுக்கும் சீருடை திட்டத்தைக் கொண்டு வர ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.
  • ராஜஸ்தானில் ஆளும் பாஜக சார்பில் வசுந்தரா ராஜே முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
  • பள்ளிகளில் உள்ளது போலவே கல்லூரி மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இருந்து சீருடை திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி கூறியுள்ளார்.

மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்பு

  • மேகாலயா மாநில புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் ஹெலிகாப்டர் போக்குவரத்து அறிமுகம்

  • பெங்களூருவில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையத்துக்கு செல்ல 2 மணிநேரம் ஆகிறது.
  • இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஒரு தனியார் நிறுவனம் ( Thumby Aviation) சார்பில் பெங்களூருவில் ஹெலி – டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • முதல்கட்டமாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ஹெச்.ஏ.எல். விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை அந்நிறுவனம் இயக்குகிறது.

உலகம்

தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புகிறேன்

  • தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
  • தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வட கொரியா பங்கேற்றது முதல் தென் கொரியா – வட கொரியா இடையே இணக்கம் அதிகரித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம்

  • பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
  • இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வராத நிலையில் 67 பேர் இறந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

வணிகம்

சுசுகி ஜிக்ஸர் 2018, ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகம்

  • சுசுகியின் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸர் மாடல் சிரீஸ் பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்த வகை பைக்குகளில் 2018-ம் ஆண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுசுகி ஜிக்ஸர் 2018 மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகமாகியுள்ளன.
  • சுசுகி ஜிக்ஸர் 80,928 ரூபாய் விலையிலும், ஜிக்ஸர் எஸ்எப் பைக் 90,037 ரூபாய் விலையிலும் (டெல்லி எக்ஸே ஷோரும் விலை) கிடைக்கின்றன.
  • இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள், சிகப்பு, சில்வர், மெட்டாலிக் ப்ளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.

பறக்கும் கார் தயாரிப்பில் போர்சே: நிறுவன உயரதிகாரி தகவல்

  • போர்சே கார் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார்.
  • மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான சாத்தியமும் உள்ளது என்றார்.

மகளிர் தினம்: பெண்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம்

  • சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ஏர் இந்தியா ஏர்பஸ் 319 ரக விமானத்தை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களைக் கொண்டு இயக்கியுள்ளது.

விளையாட்டு

உலக துப்பாக்கி சுடுதலில் மனு பாகருக்கு தங்கம்

  • உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனையான மனு பாகர் 2-வது தங்கப் பதக்கம் வென்றார்.
  • உலக துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது.
  • இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாகர், அணிகள் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.

மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

  • தென் கொரியா மகளிர் அணிக்கு எதிரான ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
  • இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் போட்டி  சியோல் நகரில் நடைபெற்றது.
  • 5-வது நிமிடத்திலேயே இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. இந்த கோலை லால்ரெம்ஷியாமி அடித்தனார்.

PDF Download

TNPSC உதவி ஆணையாளர்  தேர்வு நுழைவுச்சீட்டு- 2018

TNPSC உதவி ஆணையாளர்  தேர்வு நுழைவுச்சீட்டு- 2018:

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC) – Assistant Commissioner Written Exam தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வாணையத்தின் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நாள்10.03.2018 FN & AN ,11.03.2018 FN.

TNPSC Assistant Commissioner Written Exam Call Letter – 2018

மார்ச் 5 – நடப்பு நிகழ்வுகள்

தமிழகம்

ரூ.200 கோடியில் திட்டம் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை

  • சென்னை மாநகராட்சியில் பல மாதங்களாக பழுதடைந்து கிடந்த 2 ஆயிரத்து 917 சாலைகளை ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
  • தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள 15 பேருந்து தடச் சாலைகள், 2 ஆயிரத்து 902 உட்புறச் சாலைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 917 சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடியே 17 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து அந்த நிதியில் தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

பத்திரப்பதிவுத் துறை இணையதளத்தில் சிறப்பாக செயல்படும் சார் பதிவாளர் புகைப்படத்தை வெளியிட திட்டம்

  • தமிழகத்தில் ஆன்லைன் பத்திரப் பதிவு முறையை சிறப்பாக செயல்படுத்தும் சார் பதிவாளர்களைப் பாராட்டும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் பதிவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

ஜூன் 3-ல் ஜிப்மர் நுழைவுத்தேர்வு: வரும் 7-ம் தேதி முதல் ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்.

  • புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
  • வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது.
  • எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் ( www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

மீண்டும் தொடங்குகிறது 3வது அணி முயற்சி: பாஜக – காங்கிரஸூக்கு மாற்றாக புதிய கூட்டணி

  • பாஜக மற்றும் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்க, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி விவகாரம்: தமிழகம், கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

  • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

எஸ்எஸ்சி தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம்

  • பிப்ரவரி மாதம் 17 முதல் 21-ம் தேதி வரை நடந்த சார்நிலை பணியாளர் (எஸ்எஸ்சி) தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் புகார் எழுந்தது.
  • இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

உலகம்

டே சீரோ – தென்னாபிரிக்கா 

  • தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது
  • வரும் ஏப்ரல் 12-ம் தேதி உலகிலேயே முதன்முறையாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்கு போகப்போகிறது.

சீனாவின் நிரந்தர அதிபராகும் ஜி ஜின்பிங்

  • சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனையில் திருத்தம் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  • இந்த தீர்மானம் நிறைவேறுவதன் மூலம் ஜி ஜின்பிங்கின் தற்போதுள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டால் அவர் சீனாவின் நிரந்தர அதிபராக தொடருவார் என்று சீன அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்னர்.

சிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடரும்: பஷார் அல் ஆசாத்

  • சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

வணிகம்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பிராண்ட் ஸ்டோர்

  • இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்த பிறகு இதை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
  • இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளுக்கான விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பெரு நகரங்களில் தனது பிரத்யேக விற்பனையகத்தை (பிராண்ட் ஸ்டோர்) அமைக்க இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் 26 விற்பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்களில் பிராண்டுகளின் பிற தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மறுவிற்பனை போன் சந்தையாகும் இந்தியா

  • இந்தியாவின் நுகர்பொருள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
  • குறிப்பாக தற்போது நுகர்பொருள் சந்தையில் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியா, 2025-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
  • ரூ. 4 லட்சம் கோடி சந்தையைக் கொண்டிருக்கும். இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்துவதற்கு ஏற்ப சர்வதேச பிராண்டுகள் பலவும் இந்தியாவில் உற்பத்தி ஆலை உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ரிஸ்வி

  • உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ரிஸ்வி சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கொல்கத்தா கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

  • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தல் மெமோரியல் ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

  • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ‘தல் மெமோரியல் ரேபிட் செஸ்’ போட்டியில் உலக ராபிட் செஸ் சாம்பியனும் இந்தியரும், தமிழருமான விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முதல் டெஸ்டில் ஆஸி.வெற்றி

  • டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 PDF Download

பாடத்திட்டங்கள் TANGEDCO உதவி பொறியாளர்

பாடத்திட்டங்கள் TANGEDCO உதவி பொறியாளர் (AE):

TANGEDCO   உதவி பொறியாளர்  (Assistant Engineer) பதவியில் 325 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.TANGEDCO – உதவி பொறியாளர்   பாடத்திட்டங்கள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள் . TANGEDCO– உதவி பொறியாளர்   தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம் . TANGEDCO – உதவி பொறியாளர்   பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் .

PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும் . . . . .  .

பாடத்திட்டங்கள் TANGEDCO (AE)

இங்கே கிளிக் செய்யவும் . . .

தேர்வு மாதிரி – TANGEDCO (AE)