ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

0
ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்!
ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்!
ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ராவிற்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

இந்தியாவின் 73 வது குடியரசு தினத்தையொட்டி பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண், பத்ம பூஷன் உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்தது. இதில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கும், பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அசத்திய தேவ்ந்த்ரா ஜாஜ்ஹரியாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்:

கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தங்கபதக்கம் வென்றார். அபினவ் பிந்த்ராவுக்கு அடுத்தபடியாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 2வது வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதையடுத்து நீரஜ்க்கு பாராட்டு மழை குவிந்து வந்த நிலையில் தற்போது நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை கேட்ட நீரஜ் சோப்ரா மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

பத்ம விருதுகள் 2022 அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது! முழு விபரம் இதோ!

மேலும் “பத்ம ஸ்ரீ” விருது முன்னதாக நீரஜ் சோப்ராவுக்கு பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிக்கப்பட்டிருந்தது. நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வாங்கிய பிறகு நீரஜ் சோப்ரா பேட்டியளித்தார். அப்பேட்டியில் பத்மஸ்ரீ விருது மற்றும் பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்ட செய்தியைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் என்றும் நாட்டுக்காக என்றும் சிறப்பாக விளையாடுவேன் என்றும் தெரிவித்தார்.

73வது குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு!

மொத்தம் 128 பேருக்கு, பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் விளையாட்டு துறையின் கீழ் சுமித் அண்டில், பிரமோத் பாஹட், அவானி லெகஹரா, ஃபைசல் அலி, சங்கரநாராயண மேனன், பிரமானந்த் சன்ங்கல்வார், வந்தனா கட்டாரியா என மொத்தம் 8 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவ்ந்த்ரா ஜாஜ்ஹரியாவுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாரலிம்பிக்கில் 2 தங்கப்பதங்களை வென்ற முதல் இந்தியர் இவரே ஆகும். இவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!