ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள்!!

0
ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை - முழு விவரங்கள்!!
ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை - முழு விவரங்கள்!!
ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள்!!

தமிழகத்தில் உள்ளவர்கள் இருப்பிட சான்றிதழ் பெற இனி தாலுகா அலுவலகம் செல்ல தேவையில்லை. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து எளிதாக இந்த சான்றிதழை பெறலாம்.

இருப்பிட சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அரசு அலுவலகங்கள் ஒரு மாதமாக செயல்படவில்லை. இதனால் வேலை வாய்ப்பிற்கு தேவையான சான்றிதழ்கள் பெற முடியாமல் பலர் சிரமப்பட்டனர். மேலும் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டு 50 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணியாற்றலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இணைய வழி மோசடி புகார் எண் – மத்திய அரசு அறிவிப்பு!

குறைந்த ஊழியர்கள் காரணமாக சான்றிதழ்கள் பெற கால தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலமாக எவ்வாறு இருப்பிட சான்றிதழ் பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். முதலில் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்களை காணலாம். விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை / ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

  • இதற்கு https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தை திறந்து கொள்ள வேண்டும். Open செய்தவுடன் முகப்பு பகுதியில் Sign in Option இருக்கும்.
  • Sign in பகுதியில் Franchisee Login மற்றும் Citizen Login என்று இரண்டு Option-கள் இருக்கும்.
  • அதில் Citizen Login என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள New User Option-ஐ கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் உங்களது தொலைபேசி எண்ணிற்கு OTP வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த Login மற்றும் Password-ஐ கொடுத்து நுழைய வேண்டும்.
  • login செய்த பின்னர் Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து, Nativity Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பின்னர் Proceed என்ற option யை கிளிக் செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • கடைசியாக Register CAN என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் சரியாக நிரப்ப வேண்டும்
  • அதன் பின்னர் உங்களது தொலைபேசி எண்ணிற்கு CAN Registration Number Message வரும். அந்த எண்ணை CAN Register கட்டத்தில் கொடுத்து Proceed பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும் அதை உள்ளீடு செய்து Proceed பட்டனை மீண்டும் கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் CAN Register பண்ணும் பொழுது நீங்கள் கொடுத்த அனைத்து விபரங்களும் வந்து விடும்.
  • அதில் Category → Native by Birth தேர்வு செய்ய வேண்டும். அதில் உங்களது விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் List of Documents பகுதியில் நான்கு (Photo, Any Address Proof, Birth Certificate, Self Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும்.
  • அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளவை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும்
  • அடுத்து Self Declaration Form-ஐ தரவிறக்கம் செய்து அதில் கையெழுத்து போட்டு அதனை scan செய்து Upload செய்ய வேண்டும்.
  • அனைத்து சான்றிதழ்களையும் பதிவு செய்த பினனர் Make Payment பட்டனை கிளிக் செய்து ரூ. 60 கட்டணம் செலுத்த வேண்டும்.

உங்களது விண்ணப்பங்களை சரி பார்த்த பின்னர் தங்களின் தொலைபேசி எண்ணிற்கு தகவல் வரும். அதன்பின் TNeGA Login மூலமாக இருப்பிட சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!