SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடி எச்சரிக்கை!

சந்தேகத்திற்கிடமான URL இணைப்புகள் மற்றும் SMS ஆகியவற்றை கிளிக் செய்து பணத்தை இழந்து விட வேண்டாம் என்று மோசடி எச்சரிக்கை குறித்து SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மோசடி எச்சரிக்கை

நாடு முழுவதும் தற்போது இணையதளம் வழியாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் மோசடிகள் பெருகிக்கொண்டே வருகிறது. என்னதான் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்க முற்பட்டாலும் சில நேரங்களில் இவ்வகை மோசடிகள் எல்லைமீறக்கூடிய அளவுக்கு மாறி விடுகிறது. இருந்தாலும் இந்தியாவின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தெரியாத இணைப்புகள் மற்றும் SMS ஆகியவற்றை கிளிக் செய்வதை தவிர்க்குமாறு தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அறிவியல் திறனறித் தேர்வு!

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள SBI வங்கி நிர்வாகம், ‘உங்களுக்கு வரும் URL அல்லது SMSகளை கிளிக் செய்வதற்கு முன் அதனை சரிபார்ப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். SBI உடன் பாதுகாப்பான வங்கி சேவைக்கு மட்டும் ஆம் என்று சொல்லுங்கள். தெரியாத இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது பாதுகாப்பான வங்கிப் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் மோசடி செய்பவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் SBI வாடிக்கையாளர்கள் www.sbi-rewards.netwww.myaccount-2sbi.orgwww.cashback-sbicards.it போன்ற அறியப்படாத இணையதள முகவரிகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் www.onlinesbi.com, www.bank.sbi, www.sbiyono.sbi போன்ற இணையதளங்கள் மூலம் பாதுகாப்பான வங்கி சேவையை தொடரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலை 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கல்!

இது தவிர ‘உங்கள் SBI வங்கி கணக்கு **** KYC காரணமாக தடுக்கப்படும். இந்த இணைப்பைக் கிளிக் செய்து உடனடியாக 1000 ரூபாய் மதிப்புள்ள பரிசு அட்டையைப் பெறுங்கள்’ என்று பெறும் செய்திகளை கிளிக் செய்யாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் ஒரு முறை கடவுச்சொற்களைப் பகிர வேண்டாம் என்றும், தெரியாதவர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்றும் தனது வாடிக்கையாளர்களிடம் SBI வங்கி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!