இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அறிவியல் திறனறித் தேர்வு!

0
இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அறிவியல் திறனறித் தேர்வு!
இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - அறிவியல் திறனறித் தேர்வு!
இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அறிவியல் திறனறித் தேர்வு!

இந்தியாவில் 6 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் சார்பாக அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வு:

இந்தியாவில் மாணவர்களிடம் அறிவியல் அறிவை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வின் மூலம் மாணவர்கள் அறிவியல் ஆய்வை மேற்கொள்ளும் ஊக்கம் பெறுகின்றனர். இந்த தேர்வை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி இணைந்து நடத்துகிறது. நடப்பு ஆண்டு அறிவியல் திறனறித் தேர்வு நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலை 1 முதல் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கல்!

இத்தேர்வில் 6 முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம். அறிவியல் திறனறித் தேர்வுக்கு முன்னர் இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள் அவற்றில் பயிற்சி பெறலாம். www.vvm.org.in என்ற இணையதளம் வாயிலாக அறிவியல் திறனறித் தேர்வுக்கு அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும்.

அக்.25 முதல் மாநிலம் முழுவதும் திரையரங்குகள் திறப்பு – அரசு அனுமதி!

மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என பரிசுத்தொகை வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறுவார். தேசிய அறிவியல் திறனறித் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு 94433 02944 மற்றும் 98949 26925 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!