LKG & UKG வகுப்புகளுக்கு 30 நிமிட மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்

0
LKG & UKG வகுப்புகளுக்கு 30 நிமிட மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்
LKG & UKG வகுப்புகளுக்கு 30 நிமிட மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்

LKG & UKG வகுப்புகளுக்கு 30 நிமிட மட்டுமே ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும்

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததனால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகஅறிவிக்கப்பட்டது.

மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் தொடங்கப்படுவதில் தற்போது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ஆனால் பல பள்ளிகளில் வகுப்பு நேரம் போன்றே ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாகவும், இதனால் மாணவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகவும் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதாகவும் பெற்றோர்கள் பலர் தெரிவித்தனர்.

இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆனது தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. அதில் மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப ஆன்லைன் வகுப்பு நேரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வகுப்பு நெறிமுறைகள் :
  • LKG, UKG வகுப்புகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
  • 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகள் நடத்தலாம்.
  • 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 4 வகுப்புகள் நடத்தலாம்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!