ONGC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ONGC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ONGC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் ஊதியம் – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள GDMO, GDMO-OH ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
பணியின் பெயர் GDMO, GDMO-OH
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

ONGC காலிப்பணியிடங்கள்:

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) General Duty Medical Officer பணிக்கு 04 பணியிடங்கள் வீதமும், General Duty Medical Officer – Occupational Health பணிக்கு 01 பணியிடம் வீதமும் என மொத்தமாக 05 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
GDMO, GDMO-OH கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

GDMO, GDMO-OH வயது வரம்பு:

General Duty Medical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது. இதை பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

GDMO, GDMO-OH சம்பளம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ONGC தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ONGC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ONGC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (25.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ONGC Notification Link

ONGC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!