TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 1 நாள் மட்டுமே!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு - இன்னும் 1 நாள் மட்டுமே!
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு - இன்னும் 1 நாள் மட்டுமே!
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 1 நாள் மட்டுமே!

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை, தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து I முதல் VIII வகுப்புகளில் ஆசிரியராக நியமனம் செய்ய வரவேற்கிறது. மேலும் TN ஆசிரியர் தகுதித் தேர்வு 2022க்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி:

ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) 2022 க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 01/2022 என்ற விளம்பரத்தின் கீழ் மார்ச் 7, 2022 அன்று வெளியிடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு, மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. தேர்வில் பங்கேற்போருக்கு உரிய விண்ணப்ப கட்டணம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் 250 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3 சிலிண்டர் இலவசம்!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் – TN TET தாள் I (I முதல் V வகுப்புகளுக்கு) மற்றும் TN TET தாள் II (6 முதல் VIII வகுப்புகளுக்கு). TN TET 2022 தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்பு கட்டுப்பாடும் கிடையாது, இதுவரை சுமார் 4.50 லட்சம் பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் ஒரே கட்டத்தில் பலர் விண்ணப்பிக்க முயன்றதால் சர்வர் முடங்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பலருக்கு OTP பெறுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் பலரால் உரியக் காலத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலகெடுவை நீட்டிக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வரும் ஏப்ரல் 26 வரை கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் நாளை(ஏப்ரல் 26) TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி:

(i) விண்ணப்பதாரர்கள் TN TRB இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

(ii) தாள்-I மற்றும் தாள்-II க்கு தனித்தனி பயன்பாடுகளைப் பயன்படுத்தவும்.

ExamsDaily Mobile App Download

(iii) விண்ணப்பதாரர்கள் தங்களிடம் ஸ்கேன் செய்யப்பட்ட சமீபத்திய வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (JPG/JPEG /PNG வடிவம் 20-60 KB) மற்றும் கையொப்பம் (JPG/JPEG/PNG வடிவம் 10-30 KB) தனித்தனியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் விண்ணப்பதாரர்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்துடன் முழுமையான தகவலுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

(iv) பதிவு செய்வதற்கு செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் கட்டாயம். முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்த மின்னஞ்சல் ஐடி மற்றும் எண்கள் செயலில் இருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!