விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில், அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தொகுப்பாளர்கள் சம்பளம்:
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, Mr and Mrs சின்னத்திரை என அனைத்து நிகழ்ச்சிகளும் புகழின் உச்சியில் உள்ளன. அதற்கு முக்கிய காரணமாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவி தொகுப்பாளர்களாக இருந்து திரையுலகில் பலர் சாதனைகளை படைத்து வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனை சொல்லலாம். தற்போது பிரியங்கா, மாகாபா ஆனந்த், ரக்ஷன், ஈரோடு மகேஷ் ஆகியோர் தொகுப்பாளராக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய நகைச்சுவை குணத்துடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை பார்த்த ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு நாள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,
- பிரியங்கா – ரூ.2 லட்சம்
- மா கா பா ஆனந்த் – ரூ.2 லட்சம்
- டிடி – ரூ.4 லட்சம்
- கோபி – ரூ.5 லட்சம்
- விஜே ஜெகன் – ரூ. 2 லட்சம் (மாத சம்பளம்)
- விஜே ரக்ஷன் – ரூ.1 லட்சம்
- விஜே ஜாக்குலின் – ரூ.1 லட்சம்