விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது கோபியை சஸ்பென்சாக அழைத்து செல்லும் ராதிகா, பாக்கியாவை காண வைப்பாரா? உண்மைகள் தெரிய வரும் போது பாக்கியாவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற பல கேள்விகளுடனும் தொடர் நகர்கிறது. அப்பேற்பட்ட சீரியலில் நடிக்கும் நடிகை, நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

ஒரு நாள் சம்பளம்:

பாக்கியலட்சுமி தொடர் சமீப நாட்களாக விறுவிறுப்பாகவும், பல சுவாரஸ்யங்களும் நிறைந்த தொடராக பார்வையாளர்களை அதிகரித்து வருகிறது. வெகுளித்தனமான மனைவி பாக்கியாவை ஏமாற்றி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய நாள் முதல் இன்று வரை பாக்கியாவிடம் சிக்காமல் பல கில்லாடி வேலைகளை செய்து வரும் கோபியை தற்போது ராதிகா, டீச்சரை சந்திக்க வைக்காமல் விடப் போவதில்லை போல் இருக்கிறது.

பாக்கியாவை இழுத்து சென்ற போலீசார், கண்ணில் சிக்காமல் தப்பித்த கோபி – இன்றைய எபிசோட்!

ஏனென்றால் கோபியின் நடவடிக்கையில் ராதிகாவுக்கு சந்தேகம் எழுந்ததால், எப்படியாவது நீங்க டீச்சரை பார்த்தே ஆகணும் என்று கோபியை அழைத்து செல்கிறார். தற்போது அவர்கள் பாக்கியாவை சந்திப்பார்களா? இல்லை எப்போதும் போல் கோபி காரணம் சொல்லி தப்பிப்பாரா? பாக்கியாவுக்கு உண்மைகள் தெரிய வந்தால் என்ன செய்வார்? என்ற பல கேள்விகளுடனும், அடுத்து நடக்க போவது என்ன என்ற எதிர்பார்ப்புகளுடனும் தொடர் சுவாரஸ்யமாக நகர்கிறது.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி தொடர் கதாபாத்திரங்களுக்கு ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் பாக்கியலட்சுமியான சுசித்ரா அவர்களுக்கு ஒரு நாள் 15000 ரூபாயும், கோபியாக வரும் சதீஷ் அவர்களுக்கு ஒரு நாள் 12,000 ரூபாயும், ராதிகா அவர்களுக்கு 12,000 ரூபாயும், ஜெனி, செழியன் மற்றும் எழில் அவர்களுக்கு ஒரு நாள் 10,000 ரூபாயும், இனியாவுக்கு 8,000 ரூபாயும் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!