‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை சித்ராவுடன் இணைந்த ரோஷினி – வைரல் புகைப்படம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவியின் 2 முக்கியமான சீரியல்களான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்களின் மெகா சங்கமத்தில் நடிகை சித்ரா மற்றும் ரோஷினி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
வைரல் புகைப்படம்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய 2 சூப்பர் ஹிட் சீரியல்களான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்களின் மெகா சங்கம எபிசோடுகள் கடந்த வருடத்தில் வெளியாகி எக்கச்சக்க பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருந்தது. இந்த சீரியல்களின் மெகா சங்கமத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களுடன் நடிகை ரோஷினி ஹரிப்ரியனும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிகை சித்ராவும் இடம் பெற்றிருந்தனர்.
கேக் வெட்டி குழந்தையை வரவேற்கும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா – வைரலாகும் வீடியோ!
இந்த எபிசோடுகளுக்கு பின்பாக தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களுக்கு இன்றளவும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. இதற்கிடையில் சித்ராவின் மறைவுக்கு பிறகு இந்த சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடிகை காவ்யா நடித்து வருகிறார். இருந்தாலும் அவ்வப்போது சித்ராவை மிஸ் செய்து வரும் ரசிகர்களின் அவர் மறைந்து அடுத்த மாதத்துடன் ஒரு ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் பழைய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னைக்கு சுற்றுலா செல்வது போல சிறப்பு மெகா சங்கம எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே கதிர் முல்லை ஜோடியின் சென்னை விசிட் தொடர்பான எபிசோடுகள் மக்கள் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும் நிலையில் இந்த எபிசோடுகள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்களுக்கு பழைய முல்லையான சித்ராவை நினைவுக்கு கொண்டு வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அண்ணன், தம்பிகளை பார்த்து ஆச்சர்யப்படும் கோதை – மெகா சங்கமம் ப்ரோமோ!
தவிர தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து நடிகை ரோஷினியும் விலகி இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு ஒளிபரப்பான மெகா சங்கம எபிசோடுகளின் போது நடிகை ரோஷினி மற்றும் விஜே சித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இப்போது சீரியல்களில் இருந்து விலகி இருக்கும் இந்த 2 முக்கிய நடிகைகளையும் மிஸ் செய்து வரும் ரசிகர்கள் அந்த புகைப்படத்துக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.