
அட்ராசக்க…இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த பிரிவை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட் பெறலாம் – Passport அதிகாரி தகவல்!!
அதன்படி தற்போது ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி உய்ரநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, மத்திய துணை ராணுவப் படை பிரிவை சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, மத்திய துணை ராணுவப் படையில் தற்போது பணியில் சேர்ந்தாலும் மற்றும் இதற்கு முன்னால் பணியில் சேர்ந்திருந்தாலும், இதே போல் வருங்காலத்தில் சேரும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால், பல்லாயிரக்கணக்கான முன்னாள் ராணுவத்தினரும் அதிகம் நிவாரணம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.