தமிழகத்தில் Pre KG, LKG, UKG வகுப்புகளை திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!

0
தமிழகத்தில் Pre KG, LKG, UKG வகுப்புகளை திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் Pre KG, LKG, UKG வகுப்புகளை திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் Pre KG, LKG, UKG வகுப்புகளை திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 15ம் தேதியுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது Pre KG, LKG, UKG வகுப்புகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பள்ளி திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவ தொடங்கியது. அத்துடன் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. அத்துடன் மாணவர்களின் நலன் கருதி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த தளர்வுகள் அனைத்தும் வருகிற பிப்ரவரி 15ம் தேதி வரை பின்பற்றப்படும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!

தற்போது இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் Pre KG, LKG, UKG வகுப்புகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தப்படும். அதனால் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!