தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!

0
தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!
தமிழகத்தில் பிப்.15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் நாளை மறுநாள் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 15 ஆம் தேதிக்கு பின் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது.

மீண்டும் ஊரடங்கு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரசால் பல பாதிப்புகள் ஏற்பட்டது. மக்கள் முழு ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பின் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாக்கப்பட்டதை அடுத்து கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது.

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை ஆன்லைனில் நீக்குவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இப்படியே கொரோனாவின் முதல் அலையில் இருந்து மக்கள் மீண்டு வர மீண்டும் இரண்டாம் அலை பரவ தொடங்கியது. அதன் பின் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் பள்ளி கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு விதிகள் அனைத்தும் வருகிற 15 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

அதனால் 15 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு தேவையா என முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. வருகிற 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதனால் முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுவது, நோய்த் தொற்றின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here