தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டுவதற்கான வழிமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

0
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டுவதற்கான வழிமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டுவதற்கான வழிமுறை - கல்வித்துறை அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படம் காட்டுவதற்கான வழிமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திரைப்படங்களை காண்பித்து இத்திரைப்படத்தை சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்களுக்கு அயல்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சிறார் திரைப்படங்கள்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில்முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் கலை தொடர்பான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் திரையிடல் திட்டம் ஒன்றை ‘சிறார் திரைப்பட விழா’ என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் திரையிடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படங்களை அதற்கான பாட வேளையில் மட்டுமே காண்பிக்கப்பட வேண்டும். அத்துடன் திரைப்படம் காண்பிப்பதற்கு முன்பும், பின்னும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். இதனை தொடர்ந்து எந்த படங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அந்தந்த பள்ளிகளுக்கு விவரங்களை அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Credit & Debit கார்டு பயனர்கள் கவனத்திற்கு – செப்.1ல் முதல் புதிய விதிகள் அமல்!

இந்த திரைப்படம் முடிவடைந்த பிறகு மாணவர்களிடம் திரைப்படம் தொடர்பான விமர்சனத்தை எழுதி தர வேண்டும். இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் வாய்ப்பு வழங்கப்படும். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மாணவர்களுக்கு வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் கலை திறனை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!