சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!

0
சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!
சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!
சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!

வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களுக்கு மத்திய அரசாங்கம் மானிய தொகையை வழங்கி வருகிறது. இந்த மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படவில்லை என்றால் அதை எப்படி சரி பார்ப்பது என்ற விவரங்களை இப்பதிவில் காணலாம்.

சிலிண்டர் மானியம்

நாடு முழுவதும், வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசாங்கம் குறிப்பிட்ட அளவு தொகையை மானியமாக செலுத்தி வருகிறது. அந்த வகையில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் சிலிண்டர் விலைக்கு மத்தியில் இந்த மானியத் தொகை பலருக்கும் உதவிகரமாக இருக்கிறது. ஆனால், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் பெறுபவர்களுக்கு இந்த மானியத் தொகை சலுகைகள் பொருந்தாது. பொதுவாக, இந்த மானியத் தொகையானது பயனர்கள் முதல் முறையாக சிலிண்டர் பெற்றதற்கு பிறகு அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால், சமீப காலங்களாக சிலிண்டர் பெறும் பயனர்களுக்கு மானியத்தொகை கிடைக்கவில்லை என்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, சிலிண்டர் விலையானது 1000ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மானியத்தொகை கிடைக்காததால் பலரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யும் போது மானியத் தொகை வங்கி கணக்கில் ஏற்றப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த செயல்முறையை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் சிலிண்டர் மானியம் குறித்து சரிபார்க்க Mylpg.in என்ற இணையதளத்தை திறக்கவும். அங்கு திறக்கும் பக்கத்தில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் என மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படம் இருக்கும். அதில் நீங்கள் பயன்படுத்தும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து திறக்கும் புதிய பக்கத்தில் உள்ள மெனுவுக்கு சென்று ’Give your feedback online’என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதில் வாடிக்கையாளரின் மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும்.

10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு – மாநில திட்ட இயக்குனர் ஏற்பாடு!

அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதை கிளிக் செய்து Complaint விருப்பத்தை தேர்ந்தெடுத்து Next கொடுக்க வேண்டும். இப்போது உங்கள் வங்கி விவரங்கள் புதிய பக்கத்தில் காணப்படும். தொடர்ந்து மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம். இப்போது மானியத்தொகை உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு டயல் செய்து புகார் தெரிவிக்கும் படி வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!