இனி ஹோட்டல் மெனுவில் ‘கோழிக்கறி’ இருக்காது – கேரள உணவகங்கள் திடீர் முடிவு!
கேரளாவில் கோழி இறைச்சியின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. அதனால் உணவு பட்டியலில் இருந்து கோழி இறைச்சியை விலக்க கேரள உணவகங்கள் முடிவு செய்துள்ளன. அங்கு ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 86 ரூபாயிலிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோழி இறைச்சியின் விலை உயர்வு:
கேரளாவில் கோழிக்கறியின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இது இறைச்சி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற வகை உணவுகளை விட அசைவ உணவுகளை மக்கள் அதிகம் விரும்புவது வழக்கம். அதிலும் கோழிக்கறி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதை பல்வேறு வகைகளில் சமைத்து உணவகங்களில் விற்பனை செய்கின்றனர். இந்த நிலையில் கோழி இறைச்சியின் விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கேரளாவில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூபாய் 86-லிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.
அனைத்து மருத்துவ கல்லூரிகளும் உடனடியாக திறக்க அனுமதி – கர்நாடகா அரசு அறிவிப்பு!
இதனால் அதை அதிகளவு வாங்கி சமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அதிக விலைக்கு விற்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் வாங்க மாட்டார்கள் என்றும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் கோழி இறைச்சி உணவுகளை, உணவகங்களின் பட்டியலில் இருந்து நீக்க உணவக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் உணவக தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்களில் அமர்ந்து உண்ண அரசு தடை விதித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் வருகை இன்றி உணவக தொழில்கள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
தற்போது கோழிக்கறி விலை உயர்வால் உணவக உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. கேரளாவில் 80% கோழி இறைச்சியை உணவகங்களே வாங்குகின்றன. அதனால் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள உணவு சங்கத்தின் தலைவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சந்தை விலையை விட குறைவான விலைக்கு கோழி இறைச்சியை விற்கும் நிலை ஏற்படும் என்ற அச்சத்தால் வியாபாரிகள் விலையை அதிகரித்துள்ளதாக கேரள கோழி வளர்ப்போர் சங்கம் தெரிவித்துள்ளது.