ரயில்வே பணிகளுக்கு 2023 ஆம் ஆண்டில் IRMS தேர்வு ரத்து – ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!!

0
ரயில்வே பணிகளுக்கு 2023 ஆம் ஆண்டில் IRMS தேர்வு ரத்து - ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!!
ரயில்வே பணிகளுக்கு 2023 ஆம் ஆண்டில் IRMS தேர்வு ரத்து - ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!!
ரயில்வே பணிகளுக்கு 2023 ஆம் ஆண்டில் IRMS தேர்வு ரத்து – ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு!!

இந்திய ரயில்வே நிர்வாகப் பணியில் ஆட்களை தேர்வு செய்ய இனி IRMS தேர்வு நடத்தப்படாது எனவும், UPSC சிவில் சர்வீஸ் தேர்வை ஐஆர்எம்எஸ் தகுதித் தேர்வாக அறிவித்து ரயில்வே அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு:

முன்னதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு 2023 ஆம் ஆண்டு முதல் UPSC ஆல் நடத்தப்படும் தனித்துவ தேர்வான ஐஆர்எம்எஸ் தேர்வு மூலமாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , UPSC மற்றும் DoPT உடன் கலந்தாலோசித்து இந்திய ரயில்வே நிர்வாகப் பணியில் ஆட்களை தேர்வு செய்ய இனி IRMS தேர்வு நடத்தப்படாது எனவும், UPSC சிவில் சர்வீஸ் தேர்வை தகுதி தேர்வாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது,

ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் சாமானியர்கள்!

மேலும் இந்த IRMS தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதில் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பிரிலிம்ஸ் தேர்வு, ஐஎம்ஆர்எஸ்இ மெயின் தேர்வுக்கான தகுதித் தேர்வாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்கள், தாள் முறை, வயது வரம்பு ஆகியவை UPSC தேர்வு போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் UPSC சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்பதிவு பிப்ரவரி 1, 2023 அன்று தொடங்கி பிப்ரவரி 21, 2023 அன்று முடிவடையும் எனவும், விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் UPSC இன் அதிகாரப்பூர்வ தளமான upsc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UPSC முதல்நிலைத் தேர்வு மே 28, 2023 அன்று நடத்தப்படும் எனவும், இந்த ஆண்டு 1105 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!