ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் சாமானியர்கள்!

0
ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் சாமானியர்கள்!
ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் சாமானியர்கள்!
ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் உயர்ந்த தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் சாமானியர்கள்!

தமிழகத்தில் தங்கத்தின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய மாலை நேரப்படி ஒரு சவரன் ரூ. 720 அதிகரித்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை

இந்தியாவில் தங்கத்தின் விலை பல்வேறு காரணங்களால் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நேற்றும் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் சென்னை – ராமநாதபுரம் இடையே விமான சேவை – மத்திய அரசு தகவல்!!

Follow our Instagram for more Latest Updates

இன்றைய (பிப். 01) காலை நேர நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ரூ. 43,800 க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து தற்போது மாலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 720 அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ. 44,000 – ஐ கடந்து ரூ. 44, 040 க்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல ஒரு கிராம் தங்கம் 5,505க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை 1000க்கும் ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அடுத்தடுத்து சுப முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் திருமணத்திற்கு நகைகள் வாங்க திட்டமிட்டிருந்தோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!