ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ரிப்போ வட்டி விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம்:
இந்திய பொருளாதார வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வட்டி விகிதத்தில் மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு ரெப்போ விகிதத்தை ஆறாவது முறையாக 6.5% ஆக தொடர முடிவு செய்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும் குறைந்த தங்கம் விலை… இன்றைய ரேட் பாருங்க!
ஆனால், இந்தியாவில் பணவீக்கம் கீழ்நோக்கிய பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல்நோக்கு கொள்கையின் நிதி அமைப்பை நிலையாக வைத்திருக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தால் வங்கி கடனுக்கு இஎம்ஐ செலுத்துபவர்களின் சுமை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.