ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!

0
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!
ரிலையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் குறைப்பு? நிதா அம்பானி விளக்கம்!

கொரோனா வைரஸ் தொற்று காலம் முழுவதும் தனது ஊழியர்களின் சம்பளம், போனஸ் அல்லது வேறு எந்த இழப்பீடு தொகையையும் குறைக்கவில்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் நிதா அம்பானி தெரிவித்துள்ளார்.

முழு ஊதியம்

இந்தியாவின் முன்னணி தொழில்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கொரோனா பேரிடர் காலத்தில், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கவில்லை என ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், தலைவருமான நிதா அம்பானி தெரிவித்துள்ளார். முன்னதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 44 வது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 25) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரிலையன்ஸ் நிறுவனர் நிதா அம்பானி, ‘கொரோனா நோய் தொற்று ஒரு மனிதகுலத்துக்கான நெருக்கடி ஆகும்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை!

இது மனிதகுலத்தின் பலத்தை சோதித்து பார்க்கையில், எங்களது பலம் பிரகாசமாகவே இருந்தது. நாங்கள் ஒன்று கூடி இந்த போரில் ஈடுபட்டு வருகிறோம். கொரோனா தொற்று காலத்திலும் எங்கள் ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் அல்லது வேறு எந்த இழப்பீட்டையும் நாங்கள் குறைக்கவில்லை’ என கூறினார். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், இந்தியா கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டது. ரிலையன்ஸ் நிறுவனம் உடனடியாக ஒரு முயற்சியில் இறங்கியது.

இன்று முதல் 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விவரங்கள் இங்கே!

இதற்கு முன் நாங்கள் ஒரு போதும் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யவில்லை. ஆயினும், தேவை ஏற்பட்டபோது, நாங்கள் அதை செய்தோம். அதன் பலனாக ஒரு நாளைக்கு 1100 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தோம் என கூறினார். இது தவிர ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர்கள், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட 20 லட்சம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனர் நிதா அம்பானி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!