2ம் ஆண்டு மாணவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு… மாதம் ரூ.10000/- உதவித்தொகை!

0
2ம் ஆண்டு மாணவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு... மாதம் ரூ.10000/- உதவித்தொகை!

திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் SERBSRG திட்டத்தின் (SRG/2023/002323) அறிவியல் சமூகப் பொறுப்பின் (SSR) கீழ் வேதியியல் துறையில் இன்டர்ன்ஷிப் பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களின் (NIT திருச்சி தவிர) வேதியியல் 2ஆம் ஆண்டு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 07.05.2024 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIT திருச்சி இன்டர்ன்ஷிப் விவரங்கள்:

  • தகுதி விவரங்கள்: இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி (வேதியியல்) படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • கால அளவு: இரண்டு மாதம் மட்டும் அதாவது 15.05.2024 முதல் 31.07.2024 வரை இன்டர்ன்ஷிப் நடைபெற உள்ளது
  • தேவைப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கை: 1
  • தேர்வு செயல் முறை: இதற்கு மாணவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • உதவித்தொகை: உதவித்தொகையாக பயிற்சியாளருக்கு ஒரு மாதம் ரூ.5000/- வீதம் 2 மாதங்களுக்கு ரூ.10000/- ஊதியம் வழங்கப்படும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்தவுடன் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

TNPSC தேர்வில் கணித பாடத்தில் எவ்வாறு ஈசியாக பாஸ் ஆகலாம்? -இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மாணவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை m https://forms.gle/eabigJW89BFFdbFE7 என்ற Google படிவத்துடன் பூர்த்தி செய்து 07.05. 2024 (பிற்பகல் 11:59) அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!