‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – என்ட்ரி கொடுக்கும் ரியோ? வெளியான புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய ட்விஸ்ட் - என்ட்ரி கொடுக்கும் ரியோ? வெளியான புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய ட்விஸ்ட் - என்ட்ரி கொடுக்கும் ரியோ? வெளியான புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – என்ட்ரி கொடுக்கும் ரியோ? வெளியான புகைப்படம்!

மக்களின் மனம் கவர்ந்த முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர், நடிகைகளுடன் இணைந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரியோ எடுத்துகொண்ட சமீபத்திய புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது தான் வழக்கமான ட்ராக் பக்கம் திரும்பியுள்ளது. லட்சுமி அம்மாவின் திடீர் இறப்பினால் உடைந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு வருகின்றனர். அதனுடன் தனத்துக்கு பிறந்துள்ள குழந்தையையும் கொண்டாடி வருகின்றனர். அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் எபிசோடுகள் மீண்டுமாக கலகலப்பு, உற்சாகத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸில்’ வருமானத்தை விட செலவு தான் அதிகம் – நாடியா சாங் குடும்பத்தினர் வருத்தம்!

அதிலும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த கதிர், முல்லையின் காதல் காட்சிகளும் கடந்த சில எபிசோடுகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சுமூகமாக செல்லும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என யோசித்து வந்த நிலையில் அது பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவாக இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதிபடுத்தும் விதமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினருடன் நடிகர் ரியோ எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு – எல்லைமீறும் எபிசோட்கள்!

அந்த புகைப்படத்தில் ரியோ வேஷ்டி சட்டையுடன் இருப்பது போல தெரிகிறது. அவருடன் நடிகர் ஸ்டாலின் பட்டு வேஷ்டி சட்டையுடனும், நடிகை சாய் காயத்ரி புதிய உடையிலும் ரீல்ஸ் செய்வது போல தோற்றமளிக்கிறது. அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களம் ஏதேனும் கொண்டாட்டமாக இருக்கலாம் அல்லது தனத்தின் குழந்தைக்கு நடத்தப்படும் பெயர் சூட்டும் விழாவில் நடிகர் ரியோ கலந்து கொண்டிருக்கலாம் என்பது ரசிகர்களின் கணிப்பாக இருந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!