‘தென்றல் வந்து என்னை தொடும்’ – விஜய் டிவியில் புதிய சீரியல் ப்ரோமோ!

0
'தென்றல் வந்து என்னை தொடும்' - விஜய் டிவியில் புதிய சீரியல் ப்ரோமோ!
'தென்றல் வந்து என்னை தொடும்' - விஜய் டிவியில் புதிய சீரியல் ப்ரோமோ!
‘தென்றல் வந்து என்னை தொடும்’ – விஜய் டிவியில் புதிய சீரியல் ப்ரோமோ!

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சீரியல் பிரிவில் விஜய் டிவிக்கு தனி இடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி புதிய சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய சீரியல்:

கொரோனா காரணமாக பெரிய திரைப்படங்கள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில், சின்னத்திரை சீரியல்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே தொடங்கியுள்ளது. பல சீரியல்கள் போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடிக்க புதிய சீரியல்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவி புதிய சீரியல் குறித்த ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வனிதாவை மீண்டும் சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன் – பவர் ஸ்டாருடன் வைரலாகும் புகைப்படம்!

மேலும் இந்த சீரியலுக்கு தென்றல் வந்து என்னை தொடும் என்ற பாடலின் முதல் வரியை பெயராக வைத்துள்ளது. ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், செந்தூரப் பூவே உள்ளிட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சீரியல் வித்தியாசமான கதைக்களம் கொண்டதாக உள்ளது.

ஏனென்றால் நேற்று வெளியான ப்ரோமோவில் அமெரிக்காவில் படித்து விட்டு கிராமத்திற்கு வந்த கதாநாயகிக்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் கதாநாயகன். அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது தான் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் கதையாக உள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஈரமான ரோஜாவே மலராக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி நடிக்கிறார். இவர் ஏற்கனவே கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அவருக்கு அதன் மூலம் ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது. பிறகு ராஜா ராணி சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். கதாநாயகனாக காமெடியன் மற்றும் சீரியல் நடிகர் வினோத் பாபு நடிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அவர் ஏற்கனவே ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோ-வில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் முன்னதாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!