ஹெல்மெட் அணிந்தாலும் ரூ.2,000/- அபாரதமா? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
ஹெல்மெட் அணிந்தாலும் ரூ.2,000/- அபாரதமா? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

போக்குவரத்து துறையானது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறையை விதித்துள்ளது. இதன் படி, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும் ரூ.2000/- அபராதமாக வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ரூ.2,000/- அபராதம்:

சமீபகாலமாகவே சாலை விபத்துகளும் அதன் மூலம் ஏற்படும் உயிர் இழப்புகள் மற்றும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சாலை விபத்துகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போக்குவரத்து துறையானது பல்வேறு விதிமுறைகளை ஓட்டுநர்களுக்கு விதித்தது. இந்த வகையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால் ரூ.1000/- அபராதமாக விதிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டினாலும் ரூ.2000/- அபராதமாக விதிக்கப்படும் என்னும் புதிய விதியை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

RITES நிறுவனத்தில் ரூ.1,10,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!  

அதாவது மோட்டார் வாகன சட்டம் 194D MVA சட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்கள் ஹெல்மெட் அணிந்து “அதன் ஸ்ட்ரிப்” அணியாமல் சென்றால் ரூ.1000/- அபராதமாக வசூலிக்கப்படும். மேலும் ஓட்டுநர்கள் பிஐஎஸ் அங்கீகாரம் இல்லாத அல்லது குறைபாடுள்ள ஹெல்மெட்களை அணிந்து சென்றால் ரூ.1000/- அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபாரதங்கள் விதிக்கப்பட்டதன் நோக்கம் இரு சக்கர வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் போது ஓட்டுநர்கள் தரமான ஹெல்மெட் அணிந்திருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பதே ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!