
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கலாம் – நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
கொரோனா பரவல் தமிழகத்தில் தற்போது குறைந்து வருவதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த தளர்வுகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் – முழு விவரம் இதோ!!
இதனை அடுத்து தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு தளர்வுகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்து வருகின்றார். இந்த வாரம் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்ததால் புதிதாக பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
புதிய தளர்வுகள்
- தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
- அதே போல் கடந்த வாரம் 7 இரவு மணி வரை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த கடைகள் இரவு 8 மணி வரை திறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- அதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இ- பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.