தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் வாழும் குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணமாக இருப்பது ரேஷன் அட்டைகள் தான். இத்தகைய முக்கியமான ஆவணத்தை பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரேஷன் அட்டைகள்:

அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரேஷன் அட்டை மூலமாக தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் இருக்கிறது. அடிப்படைத் தேவையான உணவுப் பொருள்களில் இருந்து மானியம், அரசு நிதி என ரேஷன் அட்டை மூலமாகவே அரசு வழங்குகிறது. அத்தகைய ரேஷன் கார்டை பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். மேலும் புதிதாக ரேஷன் கார்ட் பெற என்ன விதிமுறைகள் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

விதிமுறைகள்:

முதலில் குடும்ப அட்டை பெற அவர்களது பெயர் எந்த குடும்ப அட்டையிலும் இருக்க கூடாது. அவ்வாறு இருந்தாலும் அதில் இருந்து அவர்களது பெயரை நீக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று தங்களது பெயரை நீக்கி கொள்ளலாம். பெயர் நீக்கிய பின் அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாக வேறு ரேஷன் கார்டு பெறும் புதிதாக திருமணம் ஆனவர்களுக்குக் திருமணம் சான்றிதழ் அவசியம். மேலும் அரசு தெரிவித்தது போல ஆதார் அட்டை, தாங்கள் குடியிருக்கும் வீட்டின் சான்றிதழ் சொந்த வீடாக இருந்தால் வீட்டுவரி ரசீது அல்லது வாடகை வீடு என்றால் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து, கூடவே புகைப்படம், எரிவாயு இணைப்பு பெற்றிருப்பின் அதனின் விவரங்கள் ஆகியவற்றுடன் இ-சேவையில் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், வேறு எந்த ரேஷன் கார்டிலும் அவர்களின் பெயர் இல்லாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவு செய்த பின் ஆவண சரிபார்ப்பு நடைபெறும். அப்போது தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்தாலோ அல்லது வீட்டின் முகவரி தவறுதலாக இருந்தாலோ அல்லது ஆவணங்களில் ஏதேனும் தவறு இருந்தாலோ ரேஷன் கார்ட் பெற விண்ணப்பிக்க முடியாது. உங்களது ரேஷன் கார்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற குறுஞ்செய்தி நம்முடைய செல்போன் எண்ணிற்கு வரும். ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் ஆவண சரிபார்ப்பு முடிந்ததும் நம் விண்ணப்பம் ஏற்கப்பட்டது என்ற குறுந்செய்தி மற்றும் அதற்கான குறிப்பாக ஒரு எண்ணும் நம்முடைய அலைபேசி எண்ணிற்கு வரும். அதை கவனமாக குறித்து வைத்து கொள்ள வேண்டும். பின் அதன் பின் நமது விண்ணப்பம் துறை வாரியான சரிபார்ப்பிற்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் தீப்பெட்டியின் விலை இன்று முதல் ரூ.2 ஆக உயர்வு – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!

இறுதியாக தாலுகாவில் உள்ள வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என அனைத்து அதிகாரிகளின் ஒப்புதல்களும் பெற்று பின் ரேஷன் கார்டு நமக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை அனைத்தும் செய்ய ஒன்று முதல் இரண்டு மாதங்கள் ஆகும். சமீபத்தில் சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர், விண்ணப்பித்த பதினைந்து நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அது நடைமுறையில் இருக்கிறதா என தெரியவில்லை. அந்த முறை நடைமுறைக்கு வந்தாலும் இதே வழிமுறைகளை பின்பற்றி தான் ரேஷன் கார்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!