புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இப்போது உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவே பயனர்கள் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

புதிய ரேஷன் கார்டுகள்

மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள் என்பது ஒவ்வொரு தனிநபருக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கான அத்தியாவசிய தேவைகளை மிகக்குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் சேவைகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம் தான் செய்யப்படுகிறது. இப்படி பலதரப்பட்ட சேவைகளை உள்ளடக்கிய இந்த ரேஷன் அட்டைகள், தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழக மின் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு – ஒரே பெயரின் கீழ் பல இணைப்புகள் இருந்தால் நடவடிக்கை!

அதாவது வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்ல முற்படும் நபர்கள் நாட்டின் எந்தவொரு மூலைக்கும் சென்று தடையில்லாமல் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தின் கீழ் புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ள ஏதேனும் அலுவலகம் சென்று அலைந்து திரியவேண்டியதில்லை. அதற்காக தான், டிஜிட்டல் மூலமாக ஆன்லைன் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது இந்த திட்டத்தின் கீழ் யார் யார் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்கான முறை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:

இதுவரை விண்ணப்பிக்காத அல்லது தேசிய அடையாள அட்டையைப் பெறாத இந்தியாவில் வசிக்கும் எவரும் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தவிர திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அதே மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதியுடைய நபராக இருந்து இதுவரை ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க:
  • உணவு, வழங்கல் மற்றும் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • பின்னர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • இப்போது உணவுப் பாதுகாப்பிற்கு விண்ணப்பிக்க, NFSA 2013 விண்ணப்பப் படிவத்திற்குச் செல்லவும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு – போலியான தகவல்கள்! PIB அதிகாரப்பூர்வ எச்சரிக்கை!

  • பின்னர் அடையாள அட்டை (வாக்காளர் ஐடி, பான் கார்டு, பாஸ்போர்ட்), குடியிருப்பு முகவரி சான்று (ஆதார் அட்டை, எல்பிஜி இணைப்பு, மின் கட்டணம், தொலைபேசி பில், வீட்டு ஒப்பந்தம்), வருமான உத்தரவாதம், சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • பிறகு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சுய முகவரியிடப்பட்ட அஞ்சல் அட்டையை பதிவேற்றவும்.
  • ரேஷன் கார்டுக்கான கட்டணங்களை செலுத்தி submit கொடுக்கவும்.

இப்போது கொடுக்கப்பட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் உங்கள் ரேஷன் கார்டு உங்கள் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!