இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் – ஆய்வு தகவல் வெளியீடு!

0
இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் - ஆய்வு தகவல் வெளியீடு!
இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் - ஆய்வு தகவல் வெளியீடு!
இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் – ஆய்வு தகவல் வெளியீடு!

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 50% ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க போராடுவதாக ஆய்வுத்தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

IT ஊழியர்கள்

இந்தியாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களில் பணிபுரியும் நான்கில் மூன்று பணியாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூட அலுவலகத்திற்கு வருவதில்லை என்று CIEL HR நடத்திய ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவல் பாதிப்புகள் உயர்ந்து வரும் சூழலில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்புவதற்கான கொள்கையை எளிதாக்கியுள்ளன. ஏனெனில் ஊழியர்களை அலுவலகம் வரவழைக்கும் படி வற்புறுத்துவதால் ராஜினாமாக்கள் அதிகமாகும் என்று இந்நிறுவனங்கள் கருதுகின்றன.

Exams Daily Mobile App Download

அதாவது, CIEL நிறுவனம் இந்தியாவில் உள்ள 40 IT நிறுவனங்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் 10 நிறுவனங்களில் மொத்தம் 900,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனங்களின் பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்து (WFH) வேலை செய்யும் முறையை தேடுவதால் அவர்களை அலுவலக வேலை முறைக்கு மாற்றுவது கடினமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர CIEL ஆல் கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 30% WFH பயன்முறையில் செயல்படுகின்றன. மீதமுள்ளவை WFOஐ மீண்டும் தொடங்கியுள்ளன அல்லது விரைவில் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க விரும்புகின்றன.

CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆனால் இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் WFH பயன்முறையிலிருந்து மாறுவதற்கான யோசனைக்கு இன்னும் வரவேற்பு கொடுக்கவில்லை. தொடர்ந்து சுமார் 40% ஐடி நிறுவனங்கள் ஹைப்ரிட் முறையில் செயல்படுகின்றன. அந்த வகையில் இந்நிறுவனங்கள், வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களுக்கு அலுவலகத்திலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முறையில் மொத்த ஊழியர்களில் 25%க்கும் குறைவானவர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய முடியும். தவிர 30% நிறுவனங்கள், ஒப்பீட்டளவில் சிறியவையாக இருந்தாலும் அனைத்து வேலை நாட்களிலும் பணியாளர்களை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!