தமிழக பள்ளி ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – கல்வித்துறை தகவல்!

0

தமிழக பள்ளி ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – கல்வித்துறை தகவல்!

தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆய்வக உதவியாளர்களுக்கான புதிய உத்தரவு குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆனது தெரிவித்துள்ளது.

ஆய்வக உதவியாளர்:

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செய்முறை தேர்வுக்கான ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் நாலாயிரத்திற்கு மேற்பட்ட ஆய்வக உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆய்வக உதவியாளர்கள் ஆய்வக செய்முறை பாடவேளை நடைபெறும் போது கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான ஆய்வக கருவிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் ஆய்வகம் போன்றவற்றை பராமரிக்கும் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆய்வக உதவியாளர்கள் ஆய்வகப் பணிகளுக்கு மட்டுமில்லாமல் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை – மத்திய அரசு அதிரடி!

இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி அவர்கள் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் கல்வியாண்டு முதல் ஆய்வக உதவியாளர்களுக்கு செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கான பணிகளை மட்டுமே வழங்க வேண்டும். இவர்களுக்கு ஆசிரியர்களைப் போன்ற பாடவேளை அட்டவணை ஆண்டின் துவக்கத்திலேயே வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!