BSNL நிறுவன வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – ஜூலை 31ம் தேதி கடைசி நாள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களுக்கு பலனளிக்கும் வகையிலும் குறைந்த விலையில் பல சலுகைகள் உள்ள அறிமுக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுக சலுகை:
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பலர் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் திறக்காத நிலையில், பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில், கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் 20 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இதனால் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் BSNL நிறுவனம் மிகவும் குறைந்த விலையில், அதிக சலுகைகள் கொண்ட ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.45 க்கு விற்கப்படும் ரீசார்ஜ் கூப்பனில் இந்த அம்சங்களை வழங்கியுள்ளது. இந்த திட்டம் விளம்பர நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட குறுகிய கால திட்டமாகும்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தில், 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை ஆகஸ்ட் 6ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். மேலும், ஜூலை 31ம் தேதி வரை இலவச சிம் கார்டுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று மேலும் பல சலுகைகளையும், BSNL நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.