தமிழக அரசின் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
தமிழக அரசின் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக அரசின் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக அரசின் ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரை சேர்ப்பது எப்படி? முழு விபரம் இதோ!

தமிழ்நாட்டில் புதிதாக திருமணம் செய்தவர்கள் ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்பது குறித்து முக்கிய தகவலை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அடுத்தாக புதிதாக பிறந்த குழந்தைகளின் பெயரை எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்த தகவலையும் தெரிவித்து உள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை வெற்றிகரமாக பிடித்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. அவர்களின் தேர்தல் வாக்கு உறுதிகள் என்று பல திட்டங்களை கூறிவந்தனர். அதிலும் திமுக ஆட்சிக்கு வந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவின் பரவல் அதிகமாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் அப்பொழுது இருந்த நிலையை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கினார். அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வந்த காரணத்தால் பொங்கல் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்தாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – மார்ச் 24 முகாம் அறிவிப்பு!

ரேஷன் கார்டை புதிதாக திருமணமானவர்கள் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த தொகுப்பின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும் அல்லது தனி கார்டாக மாற்றி கணவன், மனைவி இருவரும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தாலும் முதலில் ஏற்கனவே பெயரை அந்த உறுப்பினரின் ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். அவர்களின் பெயரை நீக்கிய பின்னர் புதிய கார்டில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை சேர்க்க முடியும். இதனை ஆன்லைன் மூலமாகவே செய்து விடலாம். மேலும் இதை தொடர்ந்து அடுத்ததாக ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். இதிலும் தங்களின் முகவரியை மாற்ற வேண்டும். அதன் பின்னர், திருத்தப்பட்ட ஆதார் அட்டையை ஆவணமாக சமர்பித்து ரேஷன் கார்டில் பெயரை சேர்க்கலாம். https://tnpds.gov.in/ இந்த லிங்கில் சென்றால் ரேஷன் கார்டு மாற்றங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற அனைத்து தகவல்களும் இடம் பெற்று இருக்கும்.

மேலும் அதனை தொடர்ந்து பிறந்த குழந்தையின் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் குழந்தை பிறந்தால், முதலில் பிறந்த குழந்தையின் ஆதார் அட்டையை வாங்க வேண்டும். இதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படும். அதன் பிறகு, ஆதார் அட்டையில் பெயரைப் பதிவு செய்ய விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் இந்த செயல் முறைகளை ஆன்லைன் வழியாகவே வீட்டில் இருந்த படியே செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!