IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

0
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்!
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு - ரசிகர்கள் உற்சாகம்!
IPL சீசன் 15: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் புதிய ஜெர்சி வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!

வரும் மார்ச் 26ம் தேதியன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (KKR) எதிரான போட்டியுடன் ஐபிஎல் 2022 சீசனை துவங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசனுக்கான புதிய ஜெர்சியை தற்போது வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் அணிந்து கொள்ள இருக்கும் புதிய ஜெர்சியை இன்று (மார்ச்.23) வெளியிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த சீசனில் CSK அணி தனது 5வது ஐபிஎல் கோப்பையை வெல்லும் முயற்சியில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் IPL போட்டிகளில் இதுவரை 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் சாதனையை CSK சமன் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கில் ஒரு அணி வென்ற போட்டிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது. ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பிளே-ஆஃப்களுக்கு தகுதி பெற்ற அணியாக இருக்கிறது. தவிர கேஷ் ரிச் லீக் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான இறுதிப் போட்டிகளுக்கு CSK அணி தகுதியாகி இருக்கிறது. இதற்கிடையில் இந்த ஆண்டிற்கான முதல் போட்டியில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்த சீசனின் தொடக்கத்திற்கு முன்னதாக, CSK அணி புதிய ஜெர்சியை சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை உற்று நோக்குகையில் புதிய ஜெர்சி பழையதை போன்ற அமைப்பில் தான் உள்ளது என்றும் அதில் மாறுபாடு எதுவும் இல்லை என்றும் தெரிகிறது. இருப்பினும் CSK அணியின் இந்த ஜெர்சி அறிமுக நிகழ்வு ரசிகர்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர், கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, மகேஷ் துபே, ராஜவர்தன் ஹங்கர்கேகர், மகேஷ் தீக்ஷானா, சமர்ஜீத் சிங், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், சுப்ரான்சு சேனாபதி, ஆடம் மில்னே, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, சி ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான், கே பகத் வர்மா.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!