WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!

0
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய அம்சம் அறிமுகம்!
WhatsApp பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலியானது புகைப்படங்களை காணாமல் போக வைக்கும் அம்சத்தை வெளியிடவுள்ளது. இந்த அம்சமானது வியூ ஒன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம் எதற்கெல்லாம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இப்பதிவில் காணலாம்.

வியூ ஒன்ஸ்:

வாட்ஸ்அப் செயலி தனது தளத்தை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி புதிய அம்சமாக புகைப்படங்கள் காணாமல் போகும் அம்சம் என்று அழைக்கப்படும் வியூ ஒன்ஸ் அம்சத்தை வெளியிடுகிறது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் பிறருக்கு ஓர் புகைப்படம் அல்லது வீடியோக்களை அனுப்பினால் அது அவர்கள் ஒரு முறை பார்த்த பின்பு அதுவாகவே நீங்கிவிடும். மேலும் அவர்கள் புகைப்படத்தை பார்த்தார்களா என்பதும் அனுப்புநரால் அறிய முடியும்.

ஜூலை 16 வரை பகுதி நேர ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு 2.21.14.3 பதிப்பு பயனர்களுக்கு பொருந்தும். மேலும் வாட்ஸ் அப்பில் நீங்கள் Read Receipt என்னும் ஆப்ஷனை முடக்கினால், இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தில் உங்களுக்கு வரும் புகைப்படத்தை கண்ட பின், அனுப்புநரால் நீங்கள் புகைப்படத்தை பார்த்துள்ளீர்கள் என்பதை அறிய முடியும். அதே நேரத்தில் நீங்கள் பிறருக்கு புகைப்படத்தை அனுப்பினால் அதை அவர்கள் பார்த்துள்ளார்களா என்பதை உங்களால் சரியாக கண்டறிய முடியாது.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் குழுக்களில் நீங்கள் வியூ ஒன்ஸ் அம்சம் மூலம் புகைப்படங்களை அனுப்பினால் நீங்கள் Read Receipt ஆப்ஷனை முடக்கியிருந்தாலும் உங்களால் புகைப்படங்களை யார் பார்த்துள்ளார்கள் என்பதை காணமுடியும். மேலும் நீங்கள் வியூ ஒன்ஸ் அம்சம் மூலம் குழுக்களில் புகைப்படத்தை பகிரும் போது, அந்த குழுக்களில் நீங்கள் Block செய்த நபர்கள் இருந்தாலும் அவர்களால் நீங்கள் பகிர்ந்த புகைப்படத்தை ஒரு முறை காண முடியும். இதனை நீங்கள் குழுக்களில் உள்ள Message Info என்னும் ஆப்ஷன் மூலம் கண்டறிய முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!