வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள் அறிமுகம்!

0
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய அம்சங்கள் அறிமுகம்!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - புதிய அம்சங்கள் அறிமுகம்!
வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள் அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலி அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய சேவைகள் மூலம் ஒரு வாட்ஸ் அப் பயனாளர்கள் ஃப்ளாஷ் அழைப்பு, வியூ ஒன்ஸ் மற்றும் பிற அம்சங்கள் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சங்கள்:

உலகளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலி என்றால் அது வாட்ஸ் அப் தான். இதை பயன்படுத்துவதில் தனி நபர் தகவல்கள் பாதுகாப்பு உள்ளிட்ட சிக்கல்கள் நீடித்து வருகிற நிலையிலும் வாட்ஸ் அப் சிறந்த தொலைத்தொடர்பு சாதனமாக மக்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் பல புதிய அம்சங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் ஜூன், ஜூலை மாத அரிசி விநியோகம் – அரசு விளக்கம்!!

அந்த வகையில் மேலும் சில புதிய அம்சங்களை வாட்ஸ் அப் உடன் இணைக்க பேஸ்புக்குடனான செய்தியிடல் பயன்பாடு, ப்ளாஷ் அழைப்புகள், மறைந்து போகும் பயன்முறை, ஒருமுறை பார்வை மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல சாதன ஆதரவு உள்ளிட்ட சில அம்சங்களை அந்நிறுவனம் சோதித்துள்ளது. முன்னதாக பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுகர்பெர்க் மற்றும் வாட்ஸ்அப் தலைமை நிர்வாகி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் வாட்ஸ் அப் செயலியின் அம்சங்களைப் பற்றி விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் வாட்ஸ் அப் விரைவில் பல புதிய அம்சங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக அறிமுகப்படுத்தப்படும் பல சாதன ஆதரவு என்ற அம்சம் வாட்ஸ் அப்பில் நீண்ட காலமாக செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சத்தை ஒரு ஆண்டுக்கு முன்னால் wabetainfo கண்டுபிடித்தது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் மூலம் ஒருவரது வாட்ஸ் அப் கணக்கை ஒரே நேரத்தில் 4 வகையான சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே உள்ள அம்சத்தை மீண்டுமாக வெளியிட திட்டமிட்டுள்ள படி உங்கள் சேட் பாக்சில் வரும் அனைத்து செய்திகளையும் நீங்கள் விரும்பினால் ஒரு வாரத்திற்கும் மேலானதை பழைய செய்திகளை அளித்து கொள்ள முடியும். VIEW ONCE அம்சத்தை பொருத்தளவு, செய்திகளை படித்தவுடன் அவை மறைந்து போகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அடுத்ததாக ஃபிளாஷ் அழைப்புகள். வாட்ஸ் அப்பில் நீங்கள் இந்த அம்சத்தை செயல்படுத்தும்போது, வாட்ஸ் அப் உங்கள் தொலைபேசி எண்ணை அழைக்கும். பின்னர் தானாகவே அழைப்பை முடிக்கும். நீங்கள் அழைப்பைப் பெற்றீர்களா என்பதை உறுதிப்படுத்தவும், பாதுகாப்பு கருதியும் உங்கள் தொலைபேசியின் அழைப்பு பதிவை அணுகும். ஆனால் இந்த அம்சம் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்காது என்பது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!