SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறப்பு வைப்பு திட்டம் அறிமுகம்!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கான ஒரு குறிப்பிட்ட கால சிறப்பு வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டி பெற்றுக்கொள்ளலாம்.

சிறப்பு வைப்பு திட்டம்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்கள் மீது மிகுந்த அக்கறையை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலத்திலும் சிறப்பு சேமிப்பு திட்டங்கள், வட்டி விகிதங்கள், கடன் திட்டங்கள், ஆன்லைன் சேவைகள் உள்ளிட்ட பல வகையான சலுகைகளை அளித்து வருகிறது. அந்த வரிசையில் SBI வங்கி தற்போது புதிய வைப்புத் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் கூடுதல் வட்டியை பெற்றுக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – மன அழுத்தத்தை போக்க சிறப்பு பயிற்சி!

அதன்படி SBI பிளாட்டினம் வைப்பு என்று அழைக்கப்படும் இந்த புதிய வைப்புத் திட்டத்தை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தனிநபர்கள் பெறலாம். இந்த சலுகை செப்டம்பர் 14 வரை நீடிக்கும் என்று SBI தனது இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது. அதாவது ‘இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை பிளாட்டினம் வைப்புகளுடன் கொண்டாட வேண்டிய நேரம் இது. SBI உடன் சிறப்பு கால வைப்புகளுக்கான பிரத்யேக நன்மைகள் அறிவிக்கப்படுகிறது. இந்த சலுகை செப்டம்பர் 14 வரை செல்லுபடியாகும்’ என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு வைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தனிநபர்கள் 75 நாட்கள், 75 வாரங்கள் மற்றும் 75 மாத காலத்திற்கு 0.15 சதவீதம் வரை கூடுதல் வட்டி பெறலாம். இது தவிர ஒவ்வொரு தனிநபரும் 75 நாள், 525 நாள் மற்றும் 2,250 நாள் பதவிகளை சிறப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கலாம். இதன் கீழ் முதலீடுகளுக்கு கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. இதற்கான தகுதிகளாக NRE மற்றும் NRO விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த உள்நாட்டு பிரஜையும் ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்புத் தொகையின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள். NRE வைப்புகளுக்கான கால அளவு 525 நாட்கள் மற்றும் 2,250 நாட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் புதுப்பிப்பு வைப்புகளும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் இவை கால வைப்பு மற்றும் சிறப்பு கால வைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் தொடர்ச்சியான வைப்புத்தொகை, வரி சேமிப்பு வைப்பு, வருடாந்திர வைப்பு, MACAD வைப்பு, பல விருப்ப வைப்பு போன்ற திட்டங்கள் இதன் கீழ் தகுதி பெறாது. கூடுதலாக, ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் NRE மற்றும் NRO வைப்புகளும் தகுதியற்றவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனிநபர்களுக்கான SBI பிளாட்டின வைப்புகளின் வட்டி விகிதம் 3.90 சதவீதமாகும். சிறப்பு சலுகையின் கீழ், அவர்களுக்கு 3.95 சதவீதம் வட்டி கிடைக்கும்.

TN Job “FB  Group” Join Now

வாடிக்கையாளர்கள் 525 நாட்கள் கொண்ட கால கணக்கில், தற்போதுள்ள 5 சதவீதத்திற்கு பதிலாக 5.10 சதவிகிதம் வட்டி பெறுவார்கள். மேலும் 2,250 நாள் கால கணக்கில் 5.40 சதவீதத்திற்கு பதிலாக 5.55 சதவீதம் வட்டி பெறுவார்கள். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரை, SBI பிளாட்டினம் வைப்புத் தொகையின் கீழ் சிறப்பு வட்டி விகிதம் 4.45 சதவிகிதமாக இருக்கும். இது முன்பிருந்த 4.40 சதவிகிதத்திலிருந்து 0.15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்களுக்கு 525 நாள் கணக்கில் 5.60 சதவீத வட்டியும், 2,250 நாள் கணக்கில் கூடுதல் வட்டி பலனும் கொடுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!